வாழ்க்கை கொடுத்த மனுஷன்!.. வார்த்தையால கடிஞ்ச கமல்!.. இதுவே கடைசி என முடிவெடுத்த பாலசந்தர்!..

by Rohini |
kamal_main_cine
X

kamal

களத்தூர் கண்ணம்மாவில் திரைப்பயணத்தை ஆரம்பித்த கமல் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதே பாலசந்தர் மீது அதிக ஈர்ப்பு கொண்டவராக விளங்கியிருக்கிறார் கமல். அவர் படங்கள் என்றால் கமலுக்கு அலாதியான பிரியம் கூட.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த கமல்

இதை தெரிந்து கொண்ட நடிகர் ஜெமினி கணேசன் பாலசந்தரிடம் கமலை அறிமுகம் செய்து வைத்து உங்கள் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறான், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்திருக்கிறார் ஜெமினி. கமலை வைத்து ‘அரங்கேற்றம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடித்த முதல் படத்திலேயே பாலசந்தரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் கமல்.

kamal1_cine

kamal

அந்த படத்திற்கு கமல் வாங்கிய சம்பளம் 500 ரூபாயாம். குறைவாக இருக்கிறது என்று கமல் கேட்க பின்னாளில் இதே மாதிரி பலமடங்கு சம்பளம் வாங்குவாய் என சொல்லியிருக்கிறார் பாலசந்தர். அவரின் வாய் முகூர்த்தம் இன்று பலித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அவள் தொடர் கதை, அவர்கள் என பல படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் பாலசந்தர்.

கலைகளை கற்றார்

கமல் கதைக்கு ஏற்ப மிருதங்கம் போன்ற பல வித்தைகளை கற்க தொடங்கியிருக்கிறார். அவர்கள் படத்திற்காக பொம்மையுடன் பேசும் வித்தையையும் கற்றிருக்கிறார். இப்படி சினிமாவிற்காக மெனக்கிடும் கமலின் மனப்பாங்கை பார்த்து மேலும் மேலும் பாலசந்தர் பூரிப்படைந்திருக்கிறார். கிட்டத்தட்ட இருவரும் ஒரு தந்தை மகன் போன்றே பழகி வந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க :விஜயகாந்த் கொடை வள்ளலாக மாறியது ஏன்?? இதுக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா??

பாலசந்தர் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் கேட்பவர் கமல். ஒரு சமயம் ஒரு வார இதழில் ‘களத்தூர் கண்ணம்மா முதல் கல்யாணராமன் வரை’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வந்தாராம் கமல். இந்த தலைப்பை பார்த்து பாலசந்தர் கமலிடம் ‘அது என்னடா வரை என்று குறிப்பிட்டிருக்கிறாய்? உனக்கு முடிவே இல்லடா’ என்று கூற அதிலிருந்து அந்த தொடரை எழுதுவதை விட்டு விட்டாராம் கமல்.

kamal2_cine

kamal

இதன் மூலம் அந்த வார இதழ் பாலசந்தர் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக சில தகவல்கள் இருக்கின்றன. இப்படி தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட பாலசந்தரை ஒரு சமயம் தன்னுடைய கடுமையான சொற்களால் காயப்படுத்தியிர்க்கிறாராம் கமல். பாலசந்தர் கமலை வைத்து ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தவித்த பாலசந்தர்

அதே நேரத்தில் அபூர்வ சகோதரர்கள் படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்க உன்னால் முடியும் தம்பி படத்திற்காக கால்ஷீட் கொடுக்க முடியாமல் கமல் மிகவும் பிஸியாக இருந்தாராம். பாலசந்தர் எவ்ளவோ கேட்டும் கமல் வரமுடியாத நிலைமை. உடனெ பாலசந்தர் தனது உதவியாளர்கள் சிலரை அனுப்பி அவன் எப்பொழுது தான் வருவான் என்று கேட்டு வாருங்கள் என்று அறிந்து வரச் சொல்லியிருக்கிறார்.

kamal3_cine

kamal

இதையும் படிங்க : ரஜினியின் ஒரே படத்திற்கு ரெண்டு கிளைமாக்ஸ்கள்…எது ஜெயித்தது மெலடியா…ஆக்ஷனா…?

ஆனால் அவர்களிடம் கமல் ‘ஆமா அவரு வயலும் வாழ்வும் போல ஒரு படத்தை எடுப்பாரு. அந்த படத்திற்காக நான் இந்த படத்தை விட்டுவிட்டு வரனுமா’ என்று சொல்லிவிட்டாராம். இதை கேட்டு ஷாக் ஆன பாலசந்தர் பொருமையாக இருக்க ஒரு வழியாக உன்னால் முடியும் தம்பி படமும் முடிந்து விட்டது.

முடுவு எடுத்த பாலசந்தர்

அந்த படத்தின் கடைசி படப்பிடிப்பு நாளில் கமலுக்கு ஒரு பொன்னாடை போர்த்தி இதுவே நாம் இணையும் கடைசி படம் என்று சொல்லிவிட்டாராம் பாலசந்தர். இதை கேட்டதும் கமலுக்கு தூக்கி வாரிப்போட்டதாம். நாம் சொன்ன வார்த்தை இந்த அளவுக்கு பாலசந்தரை காயப்படுத்தி விட்டதே என்று நினைத்து மனம் நொந்தாராம் கமல். ஆனாலும் அதன் பிறகு இருவரும் அதே நட்புடன் தான் பழகி வந்திருக்கின்றனர். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்தார்.

kamal4_cine

kamal

Next Story