ரஜினியுடன் வொர்க் பண்ண தயங்கிய பிரபலம்! கமல் சொன்ன ஒரு வார்த்தை.. தடபுடலாக ரெடியான விருந்து

kamal
Rajini Kamal: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். 80கள் காலகட்டத்தில் இருந்து இருவரின் ஆதிக்கமும் தமிழ் சினிமாவில் ஓங்கியே இருக்கின்றது .கிட்டத்தட்ட நான்கு சதாப்தங்களாக இவர்களுடைய சினிமா பயணம் வெற்றிகரமாக இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகர்களாகவே இவர்கள் இருவரும் திகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல திரைப்பட எழுத்தாளரான கிரேஸி மோகனின் தம்பியும் நடிகருமான மாது பாலாஜி ரஜினி கமல் இவர்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அவ்வை சண்முகி படத்திற்கு வசனம் எழுதிக் கொடுத்தவர் கிரேஸி மோகன்.
இதையும் படிங்க: காமெடி நடிகருக்காக அப்பாவை தட்டி கேட்ட விஜய்!.. நட்புக்கு ஒன்னுன்னா விடமாட்டாராம்!…
அந்தப் படத்தில் அத்தனை வசனங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். நகைச்சுவையாக வசனங்களை எழுதி தருவதில் மிகவும் கில்லாடி கிரேஸி மோகன். அந்தப் படத்தை பார்த்த ரஜினி கிரேஸி மோகனுக்கு தொலைபேசி மூலமாக அழைத்து அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு உங்களுடன் சேர்ந்து நானும் படம் பண்ண விரும்புகிறேன் என கூறினாராம்.
அதற்கு கிரேஸி மோகன் ஓ தாராளமா பண்ணலாமே. ஆனால் அதற்கு முன் நான் கமலிடம் அனுமதி பெற்ற பின்னர் உங்களுடன் சேர்ந்து படம் பண்ணுகிறேன் என கூறினாராம். அதற்கு ரஜினி இப்படி ஒரு எழுத்தாளரை இதுவரை நான் சினிமாவில் பார்த்ததே இல்லை. தாராளமாக கமலிடம் நீங்கள் அனுமதி வாங்கிய பிறகு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என சொல்லி போனை வைத்து விட்டாராம்.
இதையும் படிங்க: டி.ராஜேந்தரின் பாடல்கள் கேட்க ரசனை தான்… ஆனா செஞ்ச சம்பவங்கள் தான் சோகம்..!
மறுநாள் கமலை பார்ப்பதற்காக கிரேஸி மோகன் போக என்ன ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ண போகிறீர்களாமே என கேட்டாராம் .அதற்கு முன்பாகவே ரஜினியும் கமலும் பேசிக் கொண்டிருந்தது கிரேஸி மோகனுக்கு அப்பொழுதுதான் தெரிந்திருக்கிறது. உடனே கமல் ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ணுவது என்பது பெரிய கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு சமம். அதனால் என்னுடைய அனுமதி எல்லாம் தேவையில்லை.
நீங்கள் தாராளமாக பண்ணலாம் எனக் கூறினாராம் கமல் . அதன் பிறகு இருவரும் சேர்ந்து பண்ண படம் தான் அருணாச்சலம். அந்தப் படத்தில் அமைந்த ஒவ்வொரு வசனமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் கிரேஸி மோகன் தனது தம்பிக்கு நீண்ட நாள் குழந்தை இல்லை என்பதற்காக ராகவேந்திரா சாமியை தனது கைப்பட ஓவியமாக வரைந்து இருக்கிறார். அதன் பிறகு மாது பாலாஜிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாம். அருணாச்சலம் படத்திற்கு பிறகு அந்த ஓவியத்தை ரஜினிக்கு பரிசாக அளித்தாராம் கிரேஸி மோகன்.
இதையும் படிங்க: அது ரஜினியே இருந்தாலும் செல்வராகவனிடம் அது மட்டும் நடக்காதாம்! இப்படி ஒரு ரூலா?