தப்பிக்க வழி தேடிய கமல்.! ஐடியா கொடுத்த ஹாட்ஸ்டார்…இதான் விஷயமா?…

Published on: February 21, 2022
---Advertisement---

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் தற்போது குக் வித் கோமாளி என்றாலும் அதற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதன் மூலம் நிறைய பேரை கவர முடியும் என கமல்ஹாசன் தீர்மானித்து தனது அரசியல் பிரவேசத்திற்கு உதவியாக இருக்கும் என அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்து கடந்த 5 சீசன்களை முடித்துவிட்டார்.

அதில் அவரது அரசியலுக்கு தேவையான வெளிச்சமும் கிடைத்தது என்றே கூறலாம். அதனை தொடர்ந்து கடந்த 5 சீசன்களில் சிறந்த போட்டியாளர்களாக இருந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து மொத்தமாக 50 நாளுக்கு பிக் பாஸ் அல்டிமேட் என நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTTக்கு மட்டும் ஒளிபரப்பானது.

இதையும் படியுங்களேன் – மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் நெல்சன்.! தளபதி ரசிகர்கள்கிட்ட இந்த வேலை பண்ணாதீங்கனே.!

இது டிவியில் ஒளிபரப்பு ஆகாது என்பதாலும், இதில் உள்ள போட்டியாளர்கள் ஏற்கனவே விளையாடி அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதாலும் இதில் முந்தைய அளவு சுவாரஸ்யம் மக்களிடம் இல்லை. அதனால், இதிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசித்த கமலுக்கு ஹாட்ஸ்டார் OTT  நிர்வாகமே சூப்பர் ஆஃபர் வழங்கியுள்ளது.

vikram

அதாவது கமல் நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. அப்படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் வாங்கியுள்ளது. தியேட்டர் ரிலீசுக்கு பிறகு வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளது. இன்னும் அப்பட ஷூட்டிங் முடியவில்லை. அதனால், விரைவில் அப்பட ஷூட்டிங்கை முடித்து தர கோரிக்கை வைத்தள்ளாது.

உடனே சுதாரித்து கொண்ட கமல் இதனை, விக்ரம் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும். மற்ற நடிகர்களின் கால்ஷீட் வீணாகிறது என காரணம் காட்டி, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment