டபுள் இல்ல.. டிரிபிள் ட்ரீட்! விஜயின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து
சமீப காலமாக கோலிவுட்டில் விஜய் பற்றிய ஹாட்டான அப்டேட் தான் வந்து கொண்டு இருக்கின்றது. ஒரு பக்கம் அவருடைய அரசியல் பிரவேசம் இன்னொரு பக்கம் லியோ படத்தின் அப்டேட் இன்னொரு பக்கம் தளபதி 68 படத்திற்கான அப்டேட் என இணையதள பக்கங்கள் முழுவதையும் விஜய் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்.
அதுவும் தளபதி 68 படத்திற்கான அப்டேட் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதால் லோகேஷ் இயக்கும் லியோ படத்தைப் பற்றி அனைவருமே மறந்துவிட்டனர். விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் அவர் விஜய்யுடன் கூட்டணி வைத்திருந்த லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
விஜய்யுடன் இந்தப் படத்தில் திரிஷா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு .அதையும் தாண்டி பல நட்சத்திரங்கள் லியோ படத்திற்காக நடித்துக் கொண்டு வருகின்றனர் .குறிப்பாக அர்ஜுன் ,சஞ்சய் தத், மிஷ்கின் ,கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி ,பிரியா ஆனந்த் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் வரும் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று விஜய் நடிக்கின்ற ஒரு புதிய படத்திற்கான அப்டேட் குறித்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் .அந்த வகையில் இந்த வருடமும் அவருடைய பிறந்தநாள் வருகிற 22 ஆம் தேதி ஏதாவது ஒரு அப்டேட் கொடுப்பார்களா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க அதற்கான ஒரு விருந்தை படக்குழு கொடுக்க இருக்கின்றது.
இதையும் படிங்க : நாயகன் படத்தில் மணிரத்னம் செய்த சொதப்பல்கள்!.. ரத்த கண்ணீர் வடித்த தயாரிப்பாளர்…
அதாவது விஜயின் பிறந்தநாளன்று ஓரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகிறது என்றும் அந்த வீடியோவிற்கு கமல் தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 படத்திற்கான டைட்டிலும் அதே நாளில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆகவே இந்த பிறந்தநாள் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.