கமலை நம்பினால் வேலைக்கு ஆவாது! இளையராஜா பயோபிக்கில் புதிய அவதாரம் எடுக்கும் தனுஷ்
Actor Kamal: கமல் தற்போது கைவசம் அடுத்தடுத்து படங்களை வைத்திருக்கும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அந்த படங்களுக்கு எல்லாம் கொஞ்சம் பிரேக் கொடுப்பார் என்று தெரிகிறது.
தமிழக ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொள்ள இருக்கிறார். அதனால் அவர் சார்ந்த படங்கள் அனைத்தும் கொஞ்சம் பிரேக்கில் இருக்கும் என்றுதான் தெரிகிறது.
இதையும் படிங்க: அய்யோ எங்களுக்கு கல்யாணமே ஆகல!.. ஆனா அது நடந்துடுச்சு!.. அதிதி ராவ் – சித்தார்த் கொடுத்த ஷாக்!
இந்த நிலையில் கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் இளையராஜா பயோபிக்கில் கூட கொஞ்சம் பிரச்சினை ஏற்படும் என்றே கூறப்படுகிறது. கமல் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் இரண்டு மாதம் கழித்தே இந்தப் படத்தில் கவனம் செலுத்த முடியும் என்று தெரிகிறது. அதுவரை இளையராஜா பயோபிக் படத்தை தள்ளிப் போட முடியாது என்று சொல்கிறார்கள்.
அதனால் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை தனுஷே ஏற்றிருக்கிறாராம். படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினாலும் தனுஷின் குறுக்கீடும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இளையராஜா பயோபிக் என்பது பெரிய கடல். அதை இரண்டு மணி நேரத்தில் கொடுத்துவிட முடியுமா என்றால் இல்லை. அதனால் அதை இரண்டு பாகமாக எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?
இளையராஜா அவரது சொந்தக் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வர வரைக்கும் ஒரு பாகமாகவும் அதிலிருந்து இப்போது வரைக்கும் இரண்டாவது பாகமாகவும் எடுக்க இருக்கிறார்களாம். அதனால் இளையராஜா பயோபிக்கில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இளையராஜா பயோபிக்கில் வில்லன் என ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தும். அதனால் இளையராஜாவுக்கு யாரெல்லாம் விரோதிகளாக மாறினார்களோ அவர்கள் எல்லாம் இந்த பயோபிக்கில் இடம் பெற்றால் கதை இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்