புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னனி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு அடுத்தப்படியாக அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகராக சூர்யாதான் இருக்கிறார்.

ஆரம்பத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாமல் உள்ளே நுழைந்த சூர்யா இன்று ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். தற்போது சூர்யாவின் நடிப்பில் கங்குவா படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற ஒரு புதிய படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

இதையும் படிங்க: கண்ணதாசன் பேச்சை கேட்டு எம்ஜிஆரை புறக்கணித்த வாலி! மதுபோதையில் அரங்கேறிய அந்த சம்பவம்

அதன் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை கூஸ் பம்மில் வைத்திருந்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அரசியல் ரீதியாக எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றிய கதையாகத்தான் இந்த புறநானூறு திரைப்படம் தயாராக போவதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது புறநானூறு படத்தை டிராப் செய்து விட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. ஏனெனில் சூர்யா ஹிந்தியில்தான் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. சூரறை போற்று படத்தி ஹிந்தி ரீமேக்கை சூர்யாதான் தயாரிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஓம் பிரகாஷ் இயக்கத்திலும் சூர்யா ஹீரோவாக பாலிவுட்டில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்

மகாபாரதத்தில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தித்தான் ஹிந்தியில் சூர்யாவை வைத்து படத்தை எடுக்க இருக்கிறார்களாம். அதனால் பாலிவுட்டில் சூர்யாவின் கவனம் திரும்பியுள்ளது. இதற்கு பக்கபலமாக ஜோதிகாவும் இருந்து வருகிறார். அதன் காரணமாகவேதான் மும்பையில் ஒரு சொகுசு பங்களாவும் வாங்க வைத்து அங்கேயே செட்டிலாகி விட்டதாகவும் செய்திகள் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அப்போ அகரம் ஃபவுண்டேஷன் என்பதெல்லாம் சும்மாதானா என்று கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.

 

Related Articles

Next Story