விக்ரம் படத்தின் மெகா வெற்றி கமலின் மார்க்கெட்டை வேறலெவலுக்கு கொண்டு போய்விட்டது. 30 கோடி சம்பளம் வாங்கி வந்த கமல்ஹாசன் இப்படத்திற்கு பின் தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக மாற்றிவிட்டார். விக்ரம் படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல வசூலை கொடுத்துவிட்டது.
இதையடுத்து, கமல் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியது. 4 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து கமல் நடித்த திரைப்படம்தான் விக்ரம். இப்படத்தின் வெற்றி கமலை ஒரு பிஸியான நடிகராக மாற்றியது. ஹெச்.வினோத்தை அழைத்து நாம் சேர்ந்து ஒரு படம் செய்வோம் என சொன்னார் கமல்.
இதையும் படிங்க: எப்பவும் நான்தான் கெத்து!.. சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. நிரூபித்த சூப்பர்ஸ்டார்
எனவே, அந்த படத்தின் வேலை துவங்கியது. திடிரென மணிரத்தினத்துடன் கூட்டணி போட்டார் கமல், தக் லைப் என்கிற பட அறிவிபும் வெளியானது. டைட்டில் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல், தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் நடிக்கும் கல்கி என்கிற படத்திலும் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஒருபக்கம், இந்தியன் 2 படத்தின் வேலைகளும் சூடுபிடிக்க கமல் அதில் நடிக்க துவங்கினார். அந்த படத்திற்காக அதிக காட்சிகளை ஷங்கர் எடுத்ததால் அதை வீணாக்க வேண்டாம் என நினைத்த ஷங்கர் இந்தியன் 3 படத்தையும் உருவாக்கிவிட்டார். இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையும் படிங்க: மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்
ஒருபக்கம், ஹெச்.வினோத் படம் டேக் ஆப் ஆகிறதா இல்லையா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான் சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பு – அறிவு இணைந்து இயக்கும் படத்தில் கமல் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு ஆச்சர்யப்படுத்தினார்கள்.
இந்நிலையில், தக் லைப் படத்தின் வேலை வேகமெடுத்துள்ளது. இந்த மாதம் 22ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அதேபோல், மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறார். எனவே, கேப் விடாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு நடுவே கமல் மற்ற படங்களிலும் நடிக்கவிருக்கிறாராம்.
திரைப்படங்களிலேயே அதிகம் நடிக்காமல் இருந்த கமல் திடீரென ஜெட் வேகத்தில் நடிக்க துவங்கியதோடு, அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருவது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் நடந்த ரகளை!.. கடுப்பான வனிதா.. அக்காவ் கண்ணாடி எங்க?





