More
Read more!
Categories: Cinema News latest news

கில்லி ரீ ரிலீஸ் குவித்த கலெக்‌ஷன்!.. தளபதியை சந்தித்து பிரபல தியேட்டர் ஓனர் பார்த்த வேலை!..

விஷாலின் புதிய படமான ரத்னம் முதல் மூன்று நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை ஒரேடியாக படுத்து விட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்த படம் என்றால் அது கில்லி ரீ ரிலீஸ் படம் தான்.

ஏற்கனவே கில்லி படத்தை மறு வெளியீடு செய்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்டோர் நடிகர் விஜய்யை கோட் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சந்தித்து மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகின.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

இந்நிலையில் தற்போது, கில்லி படத்தின் ரீ ரிலீஸ் காரணமாக மிகப்பெரிய வசூலை அள்ளிய கமலா சினிமாஸ் தியேட்டர் ஓனர் விஷ்ணு கமல் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனக்கு நேரில் வந்து யார் நன்றி தெரிவித்தாலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவதை தளபதி விஜய் தொடர்ந்து செய்து வருகிறார். விஷ்ணு கமலுக்கும் சால்வை அணிவித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ் போட்டா எப்படி?!.. ரசிகர்களையே கூச்சப்பட வைக்கும் ராஷி கண்ணா!..

கமலா சினிமாஸ் தியேட்டரையே கடந்த சில மாதங்களாக கே டிவிக்கு போட்டியாக மாற்றிவிட்டார் விஷ்ணு கமல். அவருக்கு எதிராக ஏகப்பட்ட மீம்களும் வைரலாகி வருகின்றன. தியேட்டரில் பாடல்களை ரசிகர்களுக்காக ஒன்ஸ்மோர் போடுவது, பாடல் ஓடிக் கொண்டிருக்கும்போது சத்தத்தை குறைத்து ரசிகர்களை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என தனியாக அலப்பறையை கிளப்பி வருகிறார் விஷ்ணு கமல்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் தொடர்ந்து மீசை இல்லாத க்ளீன் ஷேவ் லுக்கில் நடித்து வருகிறார். படம் கொடுக்கவே விஜய் அதிகபட்சமாக மகன் தோற்றத்திலேயே தென்படுவாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்கிற அச்சமும் எழத்தான் செய்கிறது.

இதையும் படிங்க: பெரிய மனுஷனா? ‘சிவாஜி’ பட சூட்டிங்கில் ஷங்கரை லெஃப்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

Published by
Saranya M

Recent Posts