ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா அமீர்கான் சத்யராஜ் உபேந்திரா ஸ்ருதிஹாசன் சௌபின் சாகிர் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் பாடல்கள் பெரிய அளவில் மக்களை சென்றடைந்து இருக்கிறது. குறிப்பாக மோனிகா பாடல் பட்டையை கிளப்பி வருகிறது. இன்று சோசியல் மீடியாக்களில் மோனிகா பாடல் தான் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.
அதில் பூஜா ஹெக்டேவின் நடனமும் கூடவே சௌபின் சாஹிரின் நடனமும் ஒன்று சேர்ந்து பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்கள். இன்னும் படம் ரிலீஸ் ஆக ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது படம் ரிலீஸ் ஆவதால் என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் உள்ள கமலா தியேட்டர் ஓனர் விஷ்ணு கமலா அவருடைய எதிர்பார்ப்பை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகிவிடும்.
கேரளா மற்றும் மற்ற ஊர்களில் புக்கிங் ஆரம்பமாகிவிட்டது. அதைப்போல வெளிநாடுகளிலும் புக்கிங் ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டில் இன்னும் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களும் வியாபார அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா தரப்புக்கும் சுமூகமாகவே இருக்கும் பட்சத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவோம் என கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல கூலி திரைப்படத்தோடு இந்திய அளவில் எதிர்பார்க்கும் திரைப்படமாக வார் 2 திரைப்படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
கமலா தியேட்டரை பொறுத்தவரைக்கும் இரண்டு ஸ்கிரீன்கள் உள்ளன. அதனால் இரண்டு ஸ்கிரீன்லையும் கூலி திரைப்படத்தை தான் போடுவோம். வார் 2 திரைப்படத்தை நாங்கள் வாங்கவே இல்லை. தலைவருக்கு தான் முதல் உரிமை. அவருடைய படத்தை தான் இரண்டு திரைகளிலும் நாங்கள் திரையிட இருக்கிறோம் என கமலா தியேட்டர் ஓனர் கூறியிருக்கிறார். வார் 2 திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்த படத்தை பார்க்கலாம் .16 வயதிற்கு உட்பட்டவர்கள் பெரியவர்களுடன் இணைந்து அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த சான்றிதழின் உள்ளடக்கம்.
அந்தப் படத்தில் கிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதன்மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் முதலில் அறிமுகமாகும் திரைப்படம். அது மட்டுமல்ல இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வார் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் வார் 2. இது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம். ஹிந்தி தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த படம் ரிலீசாக இருக்கின்றது .

இருந்தாலும் கூலி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது ஒரு பேன் இந்தியா திரைப்படம் ஆகவும் பெரிய பெரிய நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பதாலும் ரஜினி லோகேஷ் முதல் முறையாக கூட்டணி வைத்திருக்கும் திரைப்படம் என்பதாலும் கூலி திரைப்படத்திற்கு தான் எங்களுடைய முதல் முன்னுரிமை என்பதைப்போல விஷ்ணு கமலா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
