அவரு என்னையவே அப்டிதான்யா நடிக்க வைக்குறாரு.! நொந்துகொண்ட உலகநாயகன்.!

உலகநாயகன் கமல்ஹாசன் கொஞ்ச நாள் அரசியல் பயணத்தில் இருந்து விலகி, மீண்டும் தனது சினிமா பயணத்தில் புதியவர்களோடு பயணிக்க தொடங்கியுள்ளார். அதுவும் இளம் இயக்குநர்களோடு அடுத்தடுத்து களமிறங்க உள்ளார்.
முதலில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் நடித்து கொண்டிருக்கும் போதே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் இதுவரை தொகுத்து வழங்கி வந்தார்.
இதையும் படியுங்களேன் - தப்பிக்க வழி தேடிய கமல்.! ஐடியா கொடுத்த ஹாட்ஸ்டார்…இதான் விஷயமா?…
அப்போது, விஜய் டிவியின் ஆஸ்தான கலாய் காமெடியன் தீனா அதில் கலந்துகொண்டு உலகநாயகனோடு பேசினார். அப்போது, இயக்குனர் லோகேஷ் பற்றி கைதி, மாஸ்டர் சமயத்தில் நடந்த சமபவங்களை கூறினார்.
அப்போது தீனா, ' லோகேஷ் சார், எப்போதும் உங்கள் பட சீன்களை காமித்து தான் அதுபோல என்னை நடிக்க சொல்வார். ' என கூற, உடனே கமல், ' நீங்க வேற , அவர் என்னையே அப்டித்தான் நடிக்க வைக்குறாரு. என் படத்தை காமிச்சு அது மாதிரி நடிங்கனு சொல்றார்' என கிண்டலாக தனது பாணியில் பதிலளித்துவிட்டார்.