ரஜினியிடமிருந்து சத்தியராஜை பிரித்த கமல்… அட அப்பவே இவ்ளோ பண்னி இருக்காரே!…

Published on: December 24, 2022
sathyaraj
---Advertisement---

பொதுவாக எல்லா வியாபார துறைகளிலும் போட்டி, பொறாமை அதிகம் என்றாலும் திரைத்துறையில் அது ரொம்பவும் அதிகம். நேரில் சந்திக்கும்போது சிரித்து பேசிக்கொள்ளும் நடிகர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலை வாரிவிட தயாராக இருப்பார்கள். தூங்கும்போது காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும். இல்லையேல் அடக்கம் செய்து விடுவார்கள்.

போட்டி என்பது எம்ஜிஆர் – சிவாஜி துவங்கி இப்போது தனுஷ் – சிம்பு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் பரவாயில்லை. அதுவே, ஒருவரை வளரவிடாமல் தடுப்பதற்கு சில வேலைகளை செய்யும் போது ரசிகர்களுக்கு சில விஷங்கள் கிடைக்காமல் போய்விடும்.

sathyaraj

திரையுலகை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் அதிக படங்களில் வில்லனாக நடிப்பார்கள். பிரபு மற்றும் விஜயகாந்த் படங்களில் ஆனந்தராஜ், பொன்னம்பாலம் அதிக படங்களில் நடித்திருப்பார்கள். ரஜினி படத்தில் ரகுவரன் அதிக படங்களில் வில்லனாக நடித்திருப்பார். அந்த காம்பினேஷன் செட் ஆகி அதையே தொடர்வார்கள்.

இப்படித்தான் 80களில் ரஜினியின் அதிக படங்களில் சத்தியராஜ் வில்லனாக நடித்திருப்பார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் ரஜினியின் படங்களில் வில்லனாக நடிப்பதை நிறுத்திவிட்டார். பல வருடங்கள் கழித்து ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கூட வில்லனாக நடிக்க அவரை ஷங்கர் அணுகினார். ஆனால், சத்தியராஜ் மறுத்துவிட்டார். ‘நாம் கஷ்டப்பட்டு நடிப்போம். ஆனால், ரஜினி கையை ஆட்டி ஸ்டைல் பண்ணி பேர் வாங்கிகொண்டு போய்விடுவார்’ என காரணம் சொல்லியே அப்படத்தில் நடிக்க சத்தியராஜ் மறுத்தார்.

sathyaraj

ஆனால், அது மட்டும்தான் காரணமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் போதே நல்ல குணச்சித்திர வேடங்களிலும் சத்தியராஜ் நடிப்பார். பகல் நிலவு, வேதம் புதிது போன்ற போடங்களில் அவரின் நடிப்பை பார்த்தால் நமக்கு புரியும்.

kamal
kamal

இதை கவனித்த நடிகர் கமல் ‘நீங்கள் வில்லனாக நடிக்காதீர்கள். நல்ல குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடியுங்கள்’ என சத்தியராஜுக்கு அறிவுரை செய்தாராம். அதனால்தான் சத்தியராஜ் வில்லனாக நடிப்பதை நிறுத்தினாராம். ஆனாலும், கமல்ஹாசன்சொன்னது போல் இல்லாமல் ஹீரோ ஆசையில் பல படங்களில் ஹீரோவாக மட்டுமே அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படத்தை பார்த்து லெட்டர் போட்ட வெளிநாட்டு ரசிகை… கரம்பிடித்து மனைவியாக்கிக்கொண்ட விஜய்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.