Cinema History
மொத்த கதையையும் மாத்திட்டார் கமல்!.. பல வருடம் கழித்து இயக்குனர் பேட்டி….
கமல்ஹாசன் கதை திரைக்கதை எழுதி நிறைய படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன முத்திரை பதித்துள்ளன. அவர் கதை திரைக்கதை எழுதி விடுவார், அதனை வேறு இயக்குனர் இயக்குவார். அப்படி தேவர் மகன், அவ்வை சண்முகி, மகாநதி, குருதி புனல், ஆளவந்தான் என பல படங்கள் உள்ளன. அப்படி உருவான திரைப்படம் தான் அன்பே சிவம். இந்த படத்தின் கதையை கமல்ஹாசன் எழுதி இருந்தார் இயக்குனர் சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
சுந்தர்சி அதற்கு முன்னர் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்கடி, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் போன்ற காமெடி கமர்சியல் படங்களை இயக்கியிருந்தார். அவரிடம் அன்பேசிவம் கதையை சொல்லி இயக்க சம்மதம் பெற்றிருந்தார்.
இதையும் படியுங்களேன் – அடம் பிடிக்கும் கமல்.! அதிர்ச்சியில் படக்குழு.! விக்ரம் ஷூட்டிங் என்னாக போகிறதோ.?!
முதலில் கமல் கதை கூறும் போது அவருடைய கதாபாத்திரம் ஒரு விபத்திற்கு அப்புறம் சாந்தமான ஒரு ஆளாக மாறி விடுவது போல் எழுதப்பட்டிருக்கும். அதன் பிறகு சூட்டிங்கிற்கு 3 நாள் முன்னாடி கமலுக்கு ஒரு யோசனை வந்துள்ளது.
அதாவது கதைப்படி அந்த கதாபாத்திரம் கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட தைரியமான ஆள். ஆதலால் அந்த கதாபாத்திரம் விபத்திற்கு பிறகும் அதே தைரியத்தோடு நக்கலாக இருக்க வேண்டும் என உறுதி படுத்தி கொண்டு பின்னர்தான் அன்பே சிவம் திரைப்படம் மாதவனை கமல் கலாய்த்து இருப்பதுபோல தைரியமான ஒரு ஆளாக காட்சிப்படுத்தப்பட்டது. இதனை இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.