Cinema History
Ilayaraja: நீங்க பண்றது சரியில்ல!.. இளையராஜாவிடம் கோபப்பட்ட கமல்!.. விஷயம் இதுதான்!…
Ilayaraja: 80களில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கலக்கியவர் இளையராஜா. அவருக்கு பின் பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் இப்போதும் அவரின் இசைக்கு பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். 70களின் இறுதியில் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த இளையராஜா 90களின் பாதி வரை முன்னணி இசையமைப்பாளராகவே இருந்தார்.
90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற சில இசையமைப்பாளர்கள் வந்ததால் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனால், அவ்வப்போது அவரின் இசையில் படங்கள் வெளியானாலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.
இதையும் படிங்க: 3 நாள் கொல பட்டினி!.. என் பசியை போக்கியது அதுதான்!.. இளையராஜா உருக்கம்!…
83 வயதில் சிம்பொனி இசையமைத்து விட்டு வந்திருக்கிறார் இளையராஜா. இந்த சிம்பொனி வருகிற ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. 80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்களும் உருவானது. இளையராஜா எப்போதும் இசையமைப்பதில் மட்டுமே தனது நேரத்தை செலவு செய்தார்.
காலை 7 மணிக்கு துவங்கினால் மாலை வரை அவரின் இசை பணி நடந்து கொண்டே இருக்கும். படத்திற்கு டியூன் போடுவது, அந்த பாடல்களை ஒலிப்பதிவு செய்வது, படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என தொடர்ந்து இசை தொடர்பான பணிகளை மட்டுமே செய்து கொண்டே இருப்பார்.
அதாவது, சினிமா துறையினருடான அவருக்கான தொடர்பு என்பது இசை மட்டுமே. மற்றபடி பார்ட்டிகளில் கலந்து கொள்வது, படங்களை பார்ப்பது போன்ற பழக்கமெல்லாம் இளையராஜாவுக்கு கிடையாது. ஒரு பேட்டி ஒன்றில் ‘ஓய்வு நேரங்களில் சினிமா பார்ப்பீர்களா?’ என கேட்ட கேள்விக்கு இளையராஜா சொன்ன பதில் இதுதான்:
நான் இசையமைக்கும் படங்களையே நான் பார்க்க மாட்டேன். அப்படி பார்த்தால் எனக்கு தோன்றும் குறைகளை சொல்ல வேண்டியிருக்கும். மிகவும் சின்சியராக செய்யப்பட்ட ஒரு வேலையை நான் ஏன் குறை சொல்ல வேண்டும். அதற்கு மதிப்பு கொடுத்து படத்தை பார்க்காமல் இருப்பதுதான் நல்லது. எனவே, நான் படங்களை பார்ப்பதில்லை. கமல் கூட ஒருமுறை ‘நீங்க மியூசிக் பண்ண படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா?’ என கோபப்பட்டார். ஆனால், நான் சொன்னதை புரிந்து கொண்டார்’ என சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தி சினிமாவின் ஆதிக்கத்தை விரட்டி அடித்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?