அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும்!. இசைஞானியிடம் கேட்ட கமல்!. குணா பட பாடல் உருவானது இப்படித்தான்!.

கமல்ஹாசன் உருவாக்கிய கதைதான் குணா. பாலகுமாரன் வசனம் எழுத சந்தானபாரதி இயக்கிய இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் தன்னை சிவனாக பாவித்து கொள்கிறான். மேலும், கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை பார்வதி என நினைத்து அவளை திருமணம் செய்வதற்காக கடத்திகொண்டு போய் விடுகிறான்.
மலை உச்சியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைக்கிறான். ஒருபக்கம், அந்த பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் ஒரு கூட்டமும், மற்றொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளும் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இறுதியில் என்ன வானது?.. கமலின் காதல் என்னவானது என்பதுதான் கதை.
இதையும் படிங்க: நடிகைக்கு கமல்ஹாசன் அனுப்பிய பரிசு!.. பின்னால் இருக்கும் காரணம் இதுதானாம்!..
இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்களின் மனதை வருடியது. ஆனால், இந்த படம் அப்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், உலக சினிமாக்களை விரும்பும் ரசிகர்கள் குணா படத்தை எப்போதும் சிலாகித்தே பேசி வருகின்றனர்.
இந்த படம் ரசிகர்களுக்கு சரியாக புரியவில்லை. புரிந்திருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என பலரும் சொல்வதுண்டு. தற்போது இந்த படம் எடுக்கப்பட்ட குகையை மையப்படுத்தி மஞ்சுமெல் பாய்ஸ் என மலையாள படம் வந்திருக்கிறது. இந்த படத்தை பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: குணா குகைக்காக கஷ்டப்பட்ட கமல்… ஒரே விசிட்டில் ஈஸியான ஐடியாவை பிடித்த மஞ்சுமெல் பாய்ஸ்!
சென்னை மற்றும் கேரளாவில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குணா படத்தில் உள்ள ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும் இப்படத்தில் ஒரு காட்சியில் வருகிறது. இது தனக்கே கூசும்ப்ஸ்ஸாக இருந்தது என கமலும், சந்தான பாரதியும் கூறியிருந்தனர். மேலும் அப்படக்குழுவினரையும் கமல் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
இந்த படத்திற்காக ‘கா...வா.. வா.. கந்தா வா’ என்கிற பழைய பாடலை உதாரணம் காட்டி அந்த பாடல் போல கதாநாயகன் புலம்புவது போல ஒரு பாடல் வேண்டும்’ என இளையராஜாவிடம் கமல் கேட்டிருக்கிறார். அப்படி உருவான பாடல்தான் ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க’ பாடலாகும்.