அதெல்லாம் கட்டுபடியாகாது.! சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய கமல்ஹாசன்.!

Published on: March 15, 2022
kamal haasan
---Advertisement---

சினிமாவில் கொஞ்சம் இடைவெளிவிட்டு இருந்த உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது விறுவிறுப்பாக இயங்க தொடங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப் படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடித்துள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. முதலில் இப்படத்திற்காக 112 கோடி ரூபாய் விலை பேசப்பட்டது. இதனை ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக முக்கிய நபர்கள் பேசி முடித்தனர் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – சினிமாவை விட்டு விலகும் முடிவில் அஜித்.!? இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

இந்த விலையை கேட்ட கமலஹாசன் திருப்தி இல்லாமல், தானே அதற்கு விலைபேசி முடிக்கிறேன் என்று கூறி அவரே நேரடியாக ஹாட்ஸ்டார் அதிகாரியை தொடர்பு கொண்டு, இப்படத்திற்காக 125 கோடி ரூபாய் வேண்டும் என கேட்க, அதற்கு நிறுவனமும் சம் மதித்தாக கூறப்படுகிறது.

vikram

ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி கமல்ஹாசன் சம்பளம் வாங்கியிருந்தார். தற்போது அதே நிறுவனத்திடம் கறாராக பேசி தனது படத்திற்கு இதுதான் விலை என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு படத்தின் மீது அதீத நம்பிக்கையில் கமல்ஹாசன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment