Connect with us
Kamal2

Cinema History

இறந்தவருக்கு போன் போட்ட கமல்!.. உடல் நடுங்கி பதட்டமான உலக நாயகன்!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!..

நடிகர் கமல் முற்போக்கு சிந்தனை கொண்டவர். பகுத்தறி வாதி, கடவுள், பேய், ஆவி, ஜோதிடம் என எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவர் நடித்த பல திரைப்படங்களும் முற்போக்கான வசனங்களை அவர் பேசி இருக்கிறார். மகாநதி படத்தில் ‘பேய்களை நம்பாத பிஞ்சுல வெம்பாத’ என்று பாட்டே பாடுவார்.

ஆனால், நன்றாக பழகிய ஒருவரின் நட்பும், அவர் மீது இருந்த அன்பும் மரியாதையும் இறந்த பின்னரும் அவர் இருப்பது போல ஒரு உணர்வை உருவாக்கி அதனால் அவர் அவதிப்பட்ட சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். கமல்ஹாசனுக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்து நடிப்பில் மெருகேற்றியவர் இயக்குனர் பாலச்சந்தர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: பேரைக் கேட்டதுமே ஆடிப்போன கமல்!.. தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி என பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். ஒருபக்கம், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கி தன்னை மெருகேற்றிக் கொண்டார் கமல்ஹாசன். ஒருகட்டத்தில் பாலச்சந்தரே ஆச்சர்யப்படும்படி கதை, திரைக்கதை எழுதி அசத்தினார்.

பாலச்சந்தருக்கு வலது கரமாக இருந்தவர்தான் அனந்து. பாலச்சந்தர் இயக்கிய படங்களின் கதைகளில் பெரும் பங்கு ஆற்றியவர். அவர் இல்லை என்றால் பாலச்சந்தருக்கு வேலையே ஓடாது. கமலுடன் நெருங்கிய பழகியவர் இவர். கமல் மீது அன்பு கொண்டவர். அனந்து மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் கமல்.

anandu

இந்நிலையில், பாலச்சந்தர் படங்களில் தயாரிப்பு பணிகளை பார்த்துகொண்ட பிரமிட் நடராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது ‘அனந்து இறந்து சில வருடங்கள் கழித்து ஒரு நாள் கமல் எனக்கு போன் செய்தார். என்னிடம் ‘என் போன் காலர் ஐடியில் இருந்த எண்களை பார்த்துக்கொண்டே வந்தேன். அப்போது ‘அனந்து’ என்பதை பார்த்ததும் கால் செய்துவிட்டேன். போனை ஒருவர் எடுத்து ‘அனந்து’ என சொன்னதும் போனை வைத்துவிட்டேன். உடம்பெல்லாம் வேர்த்து நடுங்கிவிட்டது. உங்களிடம் பேசினால் சரி ஆகிவிடுவேன். அதனால்தான் போன் செய்தேன்’ என சொன்னார்.

‘அது அனந்துவின் வீடு. அவர்கள் வீட்டில் போனை எடுப்பர்கள் இது அனந்துவின் வீடு என சொல்ல முயற்சி செய்திருப்பார்கள்’ என சொல்லி அவரை கூல் ஆக்கினேன். பொதுவாக கமல் எமோஷனல் ஆக மாட்டார். எமோஷனல் ஃபீலிங் வந்தாலும் கண்ட்ரோலுடன் இருப்பார். அன்னைக்கு அவர் பேசியது என்னாலேயே நம்ப முடியவில்லை’ என நடராஜன் சொல்லி இருந்தார்.

அனந்துவின் புகைப்படத்தை தனது அலுவகத்தில் வைத்து ‘என்றும் என் மனதில்.. உங்கள் நான்’ என எழுதி வைத்திருக்கிறார் கமல்.

google news
Continue Reading

More in Cinema History

To Top