உனக்கு 7 நாள் தான் டைம்.! கமல்ஹாசனுக்கே செக் வைத்த ஒரே இயக்குனர் இவர்தானாம்.!
தமிழ் சினிமாவில் ஜாம்பவான். சினிமாவின் விக்கிபீடியா என்று பெருமையாக அழைக்கப்படும் நபர் கமல்ஹாசன். சுமார் 55 வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். புதுப்புது விஷயங்களை சினிமாவிற்குள் புகுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கமல்ஹாசன். தான் சம்பாதித்த பணத்தை தனக்கு பிடித்த சினிமாவில் செலவழிப்பதை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறார்.
இவர் கதை, திரைக்கதையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கமல் நடிப்பில் அண்மைகாலமாக வெளியான பல திரைப்படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவானவையே.
அதில் அவர் கதை, திரைக்கதை எழுதி விடுவார். வேறு ஒரு இயக்குனரை வைத்து அப்படத்தை இயக்க சொல்லிவிடுவார். சில நேரங்களில் மட்டும் விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம் போன்ற திரைப்படங்களுக்கு மட்டும் அவரே எழுதி அவரே இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்களேன் - கொஞ்சம் அந்தாள பாத்து காத்துக்கோங்க.! விஜய் புதுபட தயாரிப்பாளரை புகழ்ந்து தள்ளும் திரையுலகம்.!
அப்படி கமல் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் தேவர்மகன். இந்த திரைப்படத்தை இயக்க மலையாள பிரபல இயக்குனர் பரதனிடம் சென்று கேட்டுள்ளார்.
இயக்குனர் பரதன் ஒரே ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது ஏழு நாள் டைம் தருகிறேன் அந்த ஏழு நாட்களில் படத்தின் மொத்த திரைக்கதையும் எழுதி முடிக்க வேண்டும். அப்படி முடித்து விட்டால், நான் படத்தை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த சவாலை ஏற்று 7 நாளில் தேவர்மகன் படத்தின் திரைக்கதையை எழுதி சமர்ப்பித்துள்ளார் கமல்ஹாசன். அதன் பின்னர் பரதன், இத்திரைப்படத்தின் கதைக்களம் மாறாமல் அருமையாக இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேசிய விருது முதல் பல்வேறு விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.