இந்தியன் படப்பிடிப்பில் கமலுக்கு வந்த கோபம்!.. தெறிந்து ஓடிய சங்கர்… இப்படி எல்லாம் நடந்துச்சா?!..

Published on: April 3, 2023
shankar
---Advertisement---

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சிறந்த நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். 5 வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். நடன இயக்குனர், உதவி இயக்குனர், நடிகர், கதாசிரியர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த நாயகன், அபூர்வ சகோதரர்கள், குணா, மகாநதி, மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், ஹே ராம், விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களாக இருக்கிறது. இதில், நாயகனை தவிர மற்ற படங்களுக்கு கதை எழுதியவர் கமல்ஹாசன்தான். தற்போது லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனரோடு இணைந்து விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார். அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து உருவான இந்தியன் திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல் பயங்கரமாக கோப்பட்டு கத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Vasanthabalan
Vasanthabalan

ஷங்கரிடம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வசந்தபாலன். வெயில், அங்காடி தெரு, ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரி நெடுமுடிவேணு கமல்ஹாசனை கைது செய்து யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பார். கமலின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார். அந்த காட்சியை ஷங்கர் எடுத்து கொண்டிருந்தார். கமல் கீழே உருண்டு மேலே எழுந்திருப்பது போல ஒரு காட்சி. பொதுவாக உதவி இயக்குனரை நடிக்க வைத்து ஒத்திகை பார்த்துவிட்டு ஷங்கர் காட்சிகளை எடுப்பார். எனவே, நான் அந்த காட்சியில் நடித்து காட்டினேன். அப்போது கமல் அங்கு இல்லை.

அதன்பின் கமல் வந்தவுடன் அந்த காட்சியை எடுத்தோம். ஆனால், அந்த காட்சியில் கமல் நடித்தது ஷங்கருக்கு திருப்தி இல்லை. மீண்டும் மீண்டும் எடுத்தார். அந்த காட்சியில் ஷங்கருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, என்னை அழைத்து நடித்து காட்ட சொன்னார். நான் நடித்து காட்டியதை பார்த்ததும் கமலுக்கு ஈகோ வந்து கோபம் வந்துவிட்டது. நடிக்கிறது எப்படின்னு எனக்கு நீ சொல்லித்தறியா? என கண்டபடி எல்லோரையும் திட்ட துவங்கிவிட்டார். ஷங்கர், கேமராமேன் என எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. உடனே அங்கிருந்து வெளியே சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டேன். அந்த படத்திலிருந்து விலகிவிடலாம் என்று கூட நினைத்தேன். அது என்னவோ என்னை பார்த்தாலே கமலுக்கு பிடிக்கவில்லை. என்னை முறைத்து கொண்டே இருப்பார்’ என வசந்தபாலன் கூறியுள்ளார்.

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியை நிறைய காயப்படுத்திருக்கேன்! – மனம் வருந்திய பாரதிராஜா..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.