More
Categories: Cinema News latest news

உலக நாயகனை இப்படி பண்ணது நீ ஒருத்தன்தான்!.. விக்ரம் படத்தில் லோகேஷ் செஞ்ச வேலை!..

Vikram kamal: குறும்படத்தை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே சென்னையின் இருண்ட முகத்தை காட்டி அசத்தியிருந்தார். அதன்பின் கார்த்தியை வைத்து கதாநாயகியும், பாடல்களும் இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் கதைக்கு திரைக்கதை அமைத்து ஆச்சர்யப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. அப்படமும் அவருக்கு ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் கமலை வைத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் விக்ரம். இதுவரை இப்படி ஒரு கதையையோ, திரைக்கதையையோ ரசிகர்கள் பார்த்திருக்கவில்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்

ஆங்கில பட பாணியில் 3 ஹீரோக்கள் இணைந்து நடித்த படம் அது. அதுவும், கமல் படத்தில் பஹத் பாசிலுக்கும், விஜய் சேதுபதிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கமல் ஏற்கனவே நடித்து 1986ம் வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவே இப்படத்திற்கு லோகேஷ் திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் கமலுக்கு மிகவும் குறைவான வசனங்கள் மட்டுமே இருக்கும். கமலின் சினிமா வாழ்வில் இவ்வளவு குறைவான வசனங்களை பேசி அவர் நடித்த ஒரே திரைப்படம் விக்ரம் மட்டுமே. ஆனாலும், கமல் அதை ஒத்துக்கொண்டு நடித்ததுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

இத்தனைக்கும் கமல்தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஆனால், லோகேஷை நம்பி அவர் அந்த படத்தில் நடித்ததை மற்ற நடிகர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியிருந்த நேரம். லோகேஷ் கனகராஜிடம் ‘என்னப்பா ஃபர்ஸ்ட் ஆப் டப்பிங்லாம் ஆரம்பிக்கலாமா?’ என கமல் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: கமல் ஆசைக்காக ஹெச்.வினோத் செய்த செயல்… அடடே என்ன பாசமா? இல்ல அடுத்த பட வாய்ப்புக்கா?

அதற்கு லோகேஷ் சிரித்துக்கோண்டே ‘சார் ஃபர்ஸ்ட் ஆப்ல உங்களுக்கு ஒரே ஒரு வசனம்தான்.. ‘ஆரம்பிக்கலாமா’ இதுதான் உங்க வசனம்’ என்றாராம். படத்தின் இடைவேளை காட்சியில் முகத்தை மூடியிருக்கும் மாஸ்க்கை கழட்டிவிட்டு கமல் அதைத்தான் சொல்வார். அதேபோல், படம் முடியும் கொஞ்ச நேரத்திற்கு முன் கொஞ்சம் வசனம் பேசியிருப்பார்.

கமலின் திரைவாழ்வில் அவர் பேசாமல் நடித்தது ‘பேசும் படம்’ என்றால், ஒரு பக்க வசனத்தை மட்மே பேசி நடித்தது விக்ரம் படத்தில் மட்டும்தான். அவரை அப்படி நடிக்க வைத்தது லோகேஷ கனகராஜ் மட்டும்தான் என்பதை தைரியமாக சொல்லலாம்!

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான்! ரவுண்டு கட்டி அடிக்க தயாராகிட்டாங்க – புதுசா இன்னொரு பிரச்சினையா?

Published by
சிவா

Recent Posts