More
Categories: Cinema News latest news

ஆண்டவரின் அதிரடி நகர்வு.. மீண்டும் பஞ்சாயத்தில் இந்தியன்-2.! காரணம் விஜய் சேதுபதி.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது 400 கோடி வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது. இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் உற்சாகமாக தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Advertising
Advertising

இதன்படி ஏற்கனவே கிடப்பில் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன்-2 திரைப்படம் மீண்டும் உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன் – ஊர் கண்ணு வச்சிரும்.. அதனால் ‘அந்த’ விஷயம் மட்டும் வேணாம்.. உதயநிதியின் யானை மனசு.!

தற்போது கிடைத்த தகவலின்படி, இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேசலாம் என்று கமல் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அது நல்ல வரவேற்பு பெற்றது. ஆதலால் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கனவே பாதிப்படம் முடிந்த நிலையில் தற்போது வில்லனை மாற்றினால் என்ன ஆகப்போகிறதோ என்று படக்குழு கதறி பதறி வருகிறதாம். இது மீண்டும் ஒரு பஞ்சாயத்தில் முடிந்து, சூட்டிங் தடைபட்டு போகாமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள் இந்தியன்-2வின் அடுத்த அப்டேட்காக காத்திருக்கின்றனர்.

Published by
Manikandan

Recent Posts