இன்னும் எங்கள நீ பைத்தியக்காரனாவே நெனைக்குறியா.?! ரசிகர்களை குழப்பும் கமல்.!
கமல்ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டு, விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்பதாலும், மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பதாலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியது.
ஆனால், எதிர்பார்ப்பு எவ்வளவு பெரிதாக இருந்ததோ அதே வேகத்தோடும் படப்பிடிப்பும் விபத்து, கொரோனா கட்டுப்பாடுகள் என 2 வருடங்களுக்கு மேலாக முடங்கிவிட்டது. இதில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் விவேக் சில மாதங்களுக்கு முன்பு இறந்தும் விட்டார்.
இதையும் படியுங்களேன் - கீர்த்தியா.? ப்ரியங்காவா? இந்த வயதில் இது தேவை தானா?!
இதனால் இந்தியன் 2 டிராப் என்றே ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். இடை இடையே சில சம்பவங்கள் இந்தியன் 2 நிச்சயம் நடைபெறும் என நினைவூட்டும் ஆனால் அதற்கடுத்து இது நடக்குமா என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவர்.
தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து, புதிய படத்தை இயக்கி வருகிறார். அதே போல, கமல் தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருவரும் அவர்களது படங்களை முடித்த பிறகு இந்தியன் 2 திரைப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சந்தானம் பட வசனம் போல, இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனைக்குறியா என்பது போல பேச ஆரம்பித்து விட்டனர். இனி இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரபித்து அதன் போட்டோக்கள் வந்தால் மட்டுமே ரசிகர்கள் என்ன, சினிமாக்காரர்கள் கூட நம்புவார்கள் போல.