காத்திருந்த ரஜினி.. காக்க வைத்த கமல்ஹாசன்!.. குருநாதருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?!....
கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரண்டு முக்கிய நடிகர்களை உருவாக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். டீன் ஏஜில் என்ன செய்வது என தெரியாமல் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக வேலை செய்து வந்தார் கமல்ஹாசன். அவரை அங்குபார்த்து அதிர்ந்து போன நடிகர் ஜெமினி கணேசன் கமலை அழைத்துக்கொண்டு பாலச்சந்தரிடம் போனார்.
‘இவனை நடிக்க வையுங்கள்’ என சொல்ல, ‘இவன் ஆசைப்படுகிறானா?’ என பாலச்சந்தர் கேட்க, ‘இல்லை நான் ஆசைப்படுகிறேன்’ என சொன்னார் ஜெமினி கணேசன். ஏனெனில், கமல் 5 வயது சிறுவனாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்தார்.
இதையும் படிங்க: அவர் வேற மாதிரி.. சான்சே இல்ல!.. விஜயகாந்திடம் இதைத்தான் கற்றுகொண்டேன்!. உருகும் சுகன்யா..
கமலுக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்து டேக் ஆப் செய்தார் பாலச்சந்தர். கமலின் படங்களில் ரஜினியை 2வது கதாநாயகனாக நடிக்க வைத்தார். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும் என பல படங்களையும் சொல்லலாம். ஒரு பக்கம், ஆக்சன் ஹீரோவான ரஜினியை ‘தில்லு முல்லு’ படம் மூலம் காமெடியையும் செய்ய வைத்தார் பாலச்சந்தர்.
மொத்தத்தில் ரஜினி, கமல் ஆகியோரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலச்சந்தர். அந்த குருபக்தி எப்போதும் ரஜினிக்கு உண்டு. யார் சொன்னாலும் கேட்காத ரஜினி ஒருவரின் பேச்சுக்கு கட்டுப்படுவார் எனில் அது பாலச்சந்தருக்குத்தான். பல முறை அதிர்ச்சியான முடிவுகளை ரஜினி எடுத்தபோது அவரை தடுத்து அறிவுரைகளை சொன்னவர் பாலச்சந்தர்தான்.
ரஜினியை வைத்து நெற்றிக்கண், ராகவேந்திரா, வேலைக்காரன், முத்து என பல படங்களை தயாரித்தவர் பாலச்சந்தர். ஆனால், பாலச்சந்தர் தயாரிப்பில் கமல் நடித்த படங்கள் குறைவுதான். பாலச்சந்தர் மறைவுக்கு முதல் ஆளாக போனார் ரஜினி. ஆனால், வெளிநாட்டில் இருந்த கமல் சென்னை வரவே இல்லை.
அதேபோல், பாலச்சந்தரின் மறைவுக்கு பின் அவரின் மகள் புஷ்பா அவரின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக ரஜினி, கமலை அழைக்க ஆசைப்பட்டர். 12 மணிக்கு ரஜினி அப்பாயின்மெண்ட் கொடுத்த நிலையில் 11.50 மணிக்கே வரவேற்பறையில் அவருக்காக காத்திருந்தார் ரஜினி. ஆனால், கமல் கொடுத்த நேரத்திற்கு புஷ்பா போயும் 4 மணி நேரம் காக்க வைத்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாராம் கமல்.
சினிமாவில் இதெல்லாம் சஜகம் போல!...