எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்...

by சிவா |   ( Updated:2024-09-13 05:11:03  )
Kamal
X

Kamal

ஐந்து வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். சிறு வயதிலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்ரி போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அதோடு அதன்பின் 20 வயதான பின்னரே அவருக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் பாலச்சந்தர்.

அதுவரை ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் கமல். மீசை முளைத்த டீன் ஏஜ் பாயாக இருந்த கமல் சின்ன சின்ன வேடங்களில் சில படங்களில் நடித்தார். நடிப்பா? நடனமா? இல்லை ‘இதை விட்டுவிட்டு வேறு ஏதும் செய்யலாமா?’ என்கிற குழப்பம் கமலுக்கு இருந்த நேரம் அது.

அந்த சமயத்தில்தான் ஒரு படப்பிடிப்பு தளத்தில் கமலை பார்த்துவிட்டு அதிர்ந்து போன ஜெமினி கணேசன் அவரை உடனே பாலச்சந்தரிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்து ‘இவனை நடிக்க வைத்து ஒரு நடிகராக மாற்றுங்கள்’ என சொன்னார். அதன்பின்னரே அவர்கள், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி என தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தார் பாலச்சந்தர்.

மேலும், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை செதுக்கிக் கொண்டார் கமல். எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினி - கமல் என்கிற நிலையும் உருவானது. சிறந்த நடிகர்களை கமல் எப்போதும் தனது படங்களில் பயன்படுத்துவார். அதனால்தான் அவரின் படங்களில் நாசர், ஊர்வசி, ரேவதி, பசுபதி போன்ற நடிகர்கள் தொடர்ந்து நடித்தனர்.

sathya

sathya

கமலுக்கும் சத்தியராஜுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உண்டு. ‘ஹிந்தி நடிகர் நானேபடேகர் போல ஒரு சிறந்த நடிகராக நீங்கள் வர முடியும். அதைவிட்டு விட்டு ஏன் இப்படி வில்லன், லொள்ளு, ஹீரோ என நடிக்கிறீர்கள்? உங்கள் பாதையை மாற்றுங்கள்’ என சத்தியராஜிடம் தொடர்ந்து சொல்லி வந்தவர் கமல். இதை சத்தியராஜே பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.

ஒரு மேடையில் பேசிய கமல் ‘சத்தியராஜ் ஒரு சிறந்த நடிகர். அதனால்தான் எனக்கு மார்க்கெட் இல்லாத போது அவரை ஹீரோவாக வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்கிற படத்தை தயாரித்தேன். அந்த அளவுக்கு சத்தியராஜை எனக்கு பிடிக்கும்’ என கமல் சொல்லி இருக்கிறார்.

Next Story