கடவுள் பாதி மிருகம் பாதி என தொக்கா மாட்டிய வினோத்!.. ஷூட்டிங்குக்கு தேதி குறித்த உலக நாயகன்..

by சிவா |   ( Updated:2023-09-29 00:06:10  )
kamal
X

kamal

அரசியல், பிக்பாஸ் என ரூட்டை வேறுபக்கம் திருப்பி சைலைண்ட் மோடில் இருந்த உலக நாயகன் உடம்பில் குளுக்கோஸையும், புது ரத்தத்தையும் பாய்ச்சிகொண்டு விக்ரம் படத்தில் பாய்ச்சல் காட்டினார். ‘ஒன்னா நடிக்க வேண்டாம்’ என ரஜினியையே கழட்டிவிட்ட கமல் வேற வழியே இல்லாம விஜய் சேதுபதி, பகத் பாசிலுடன் சேர்ந்து அந்த படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் அதிரி புதிரி ஹிட் ஆனது.

‘இதுவரைக்கும் இவ்வளவு பணத்தை நான் பார்த்ததே இல்லையே’ என கிளிசரின் இல்லாமல் கமலே கண்கலங்கும் அளவுக்கு இந்த படத்தின் வசூல் பெட்டி பெட்டியாக அவரின் வீட்டுக்கு போன போது அவரின் ஸ்டைலில் ‘ஆஆஆஆ’ என கதறி அழுதாரா தெரியவில்லை.. மேலும், ‘இனிமே என் சம்பளம் ரூ.130 கோடி’ என அவரே போட்டுகொண்டு ‘ நான் ரஜினியை தாண்டிட்டேன்’ என கெத்து காட்டினார். அதோடு, இது போதும்டா பல வருஷத்துக்கு’ என நினைத்தாரோ என்னவோ விக்ரம் படம் வெளியான பின் மீண்டும் சைலைண்ட் மோடுக்கு போனார்.

இதையும் படிங்க: நான் இருக்க டென்ஷன்ல.. இவன் வேற என்னைய டார்ச்சர் பண்றானே!.. லியோ நடிகரால் கடுப்பான லோகேஷ் கனகராஜ்!..

வாரிசு படம் வெளியான உடனே லியோ படத்தில் நடிக்க துவங்கினார் விஜய். விக்ரம் பட வெற்றியால் தூக்கமில்லாமல் தவித்த ரஜினியோ நெல்சனுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அப்படம் பல நூறு கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

ஆனால், பிக்பாஸ் புரமோஷன், விவசாயிகளுடன் மீட்டிங் என அந்த ஷூட்டிங்குக்கு போனாரே தவிர 13 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தை ஆண்டவர் ஆரம்பிக்கவில்லை. ஃபிளாப் படங்களாக கொடுத்தபோது மருமகன் மணிரத்தினத்தை கண்டுக்காத கமல் பொன்னியின் செல்வன் ஹிட் அடித்ததும் ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அவரிடம் துண்டு போட்டார். இதில் தொக்கா மாட்டிய மணி சார் கமலுக்கு கதை பண்ண போனார்.

இதையும் படிங்க: அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..

ஒருபக்கம், அஜித்திடம் வலிமை, துணிவு என சிக்கி சின்ன பின்னமாகி கிடந்த ஹெச்.வினோத்தை அழைத்து ‘வாங்க தம்பி’ என வளைத்துப்போட்டார். லியோ படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு லோகேஷ் மூலம் தூதுவிட, ‘இவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க மாட்டாரே’ என கணக்குப்போட்ட தளபதி ‘வாய்ப்பே இல்ல ராஜா’ என மறுக்க கடுப்பான கமல் சிம்பு, சிவகார்த்திகேயன் பக்கம் போனார்.

ஒருபக்கம், ‘அஜித் மட்டும்தான் சுடுவாரா?.. நான் மட்டும் என்ன தக்களி தொக்கா?’ என நினைத்தாரோ என்னவோ, திடீரென கன் ஷூட்டிங் செய்து வீடியோவை வெளியிட்டு அவரின் ரசிகர்களை வெறியேற்றினார். ‘இப்படி சுட்டுக்கிட்டு இருந்தா ஷூட்டிங் எப்போ?’ என அவரின் ரசிக குஞ்சுகள் காத்திருக்க ‘என் பொறந்த நாளுக்கு ஷூட்டிங்’ என ஒருவழியாக வினோத்திடம் சொல்லிவிட்டாராம் கமல். நவம்பர் 2ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘இத சொல்ல 13 மாசம் ஆச்சே’ என புலம்பினாலும் கடவுள் பாதி மிருகம் பாதி போல, அவர் சொன்ன கதை பாதி. கமல் சொன்ன பாதி கதை என ஒரு கதையை உருவாக்கி ‘ஷூட்டிங் எப்படா துவங்கும்?’ என காத்திருக்கிறார் ஹெச்.வினோத்.

இதையும் படிங்க: கோட்டை விட்ட இறைவன்!.. தட்டித் தூக்கிய வேட்டையன்!.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

Next Story