மருத்துவமனையில் கமல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தபோவது யார் தெரியுமா?…

Published on: November 24, 2021
kamal
---Advertisement---

விஜய் தொலைக்காட்சியில்தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் தமிழ் தற்போது 5வது சீசனை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்காதவர்கள் கூட அவர் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

கமலுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, சில நாட்கள் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியாது. எனவே, அவருக்கு பதில் அவரின் மகள் ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியானது. கமல் பூரணமாக குணமாகும் வரை ஸ்ருதிஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

kamal

அதன்பின் ஸ்ருதிஹாசன் நடத்தப்போவது இல்லை. விஜய் சேதுபதி மற்றும் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே நடத்தவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு இதுவும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment