கமல் படமா இருந்தா என்ன.? நாங்க பாத்துட்டு தான் ஓகே சொல்லுவோம்.! SKவுக்கு வந்த சோதனை...

by Manikandan |
கமல் படமா இருந்தா என்ன.? நாங்க பாத்துட்டு தான் ஓகே சொல்லுவோம்.! SKவுக்கு வந்த சோதனை...
X

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமாக தனது படத்தை மட்டுமின்றி மற்ற ஹீரோக்களின் படங்களையும் அவர் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி அவர் தயாரிக்கும் திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார் இப்பொழுது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அனிருத் பெயரும் அடிபட்டு வருகிறது. இதில் எது உறுதியாக போகிறது என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் தெரிந்து விடும்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க விக்ரம் பட சண்டை பயிற்சியாளர் அன்பு அறிவு ஆகிய இரட்டை சண்டை இயக்குனர்களிடம் பேசப்பட்டதாம்.

அவர்கள் சண்டை காட்சிகளை வடிவமைப்பதாக இருந்தால் அப்படத்தின் கதையை கேட்டு அந்த கதையில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வார்களாம்.

இதையும் படியுங்களேன் - விண்ணைத்தாண்டி வருவாயா-2 விஜய் சேதுபதிக்கு... இன்னும் எத்தனை பேர் இந்த லிஸ்ட்ல இருக்கீங்க.?

அப்படிதான் கமல் - சிவகார்திகேயன் படத்திற்கும் நடந்துள்ளது. படத்தின் சண்டை காட்சிகள் திருப்தி அளித்த வகையில் இருந்ததால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அன்பறிவு இரட்டையர்கள் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஒத்து கொண்டனராம். யாரு படமாக இருந்தாலும் சரி, படத்தில் சண்டை காட்சிக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நாங்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைபோம் என்று கராராக கூறிவருகின்றனராம்.

Next Story