ஒரு பனியன் போட்டது குத்தமா.?! ரஜினியை வச்சி செய்து வரும் கமல் ரசிகர்கள்.!

Published on: May 10, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் எப்போதும் இருதுருவ அரசியல் இருந்து கொண்டே இருக்கும். அது எப்போதும் ரசிகர்களை குதூகலப்படுத்தி கொண்டே இருக்கும். அதே வேளையில் சினிமா வியாபாரத்திற்கும் மிகவும் உதவியாக இந்த இருதுருவ போட்டி இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால், அந்தந்த நடிகர்கள் இதனை வெளிப்படையாக விரும்பவில்லை என்றே கூறுவார்கள். அதே நேரத்தில் இந்த இருதுருவ அரசியலை கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அந்தந்த நடிகர்கள் எதோ தெரியாத்தனமாக செய்து விட அதற்கு ஓர் அர்த்தம் கண்டுபிடித்து சக போட்டியாளர் நடிகரை வசைபாட ஆரம்பித்து விடுவர் ரசிகர்கள்.

அப்படி தான் ஒரே ஒரு டி-ஷர்ட் அணிந்து உலகநாயகன் கமல்ஹாசன் சிக்கலில் மாட்டியுள்ளளார். அனிருத் இசையில் விக்ரம் படத்திற்காக முதல் பாடலை பாட வந்த கமல்ஹாசன் ஒரு டி-ஷர்ட் அணிந்து வந்துள்ளார். அதில், YOU ARE NOT THE ONLY ONE என பதிவிட்டு இருந்தது.

இதையும் படியுங்களேன் – விஜய் அளவுக்கு வியாபாரமே இல்ல., ஆனாலும் அஜித் சம்பளம் 100 கோடி!? விளாசும் சினிமா பிரபலம்.!

அதாவது, நீங்கள் முதன்மையானவாக கிடையாது. என எழுதியிருந்தது. இதனை கண்ட இணையவாசிகள் ரஜினியை குறிப்பிட்டு தான் கமல் இப்படி போட்டிருக்கிறார் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

அதாவது 2.O படத்தில் ரஜினி , ‘ இந்த நம்பர் 1 நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு,  I AM THE ONLY ONE, SUPER ONE .’  என பேசியிருப்பார். இதற்க்கு பதிலடி கொடுக்கத்தான் கமல் ஹாசன் இப்படி போட்டிருக்கிறார். என கதைக்கட்ட ஆரம்பித்து விட்டனர் இணையவாசிகள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment