Cinema History
அவர் பேசுற பேச்சுக்கு கொன்னுடலாம்னு யோசிச்சுருக்கேன்..! இயக்குனரால் கடுப்பான கமல்ஹாசன்…
நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு தமிழில் சிறப்பான நடிகர் என்று அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து அதில் தைரியமாக நடிக்க கூடிய ஒரு நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார்.
அவரது திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமையுமா? அல்லது தோல்வி படங்களாக அமையுமா? என்பதை பற்றிய கவலையே இல்லாமல் அந்த கதை பிடித்திருந்தால் அதை படமாக்க கூடியவர்.
இதனாலையே கமல் தயாரிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை கண்டுள்ளன. கமல்ஹாசன் இளம் கதாநாயகராக சினிமாவில் அடி எடுத்து வைக்கும் பொழுது அவர் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர்.
இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு மிக விருப்பமான ஒரு நடிகர் என்றால் அது நடிகர் நாகேஷ் அவர்கள்தான். எம்.ஜி.ஆர் காலகட்டத்திலேயே ஒரு தனிப்பட்ட நடிப்புத் திறனை கொண்டு தனியாக தெரிந்தவர் நடிகர் நாகேஷ்.
நாகேஷ்க்கு பிறகு கமல்:
கமல் பாலச்சந்தர் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்கும்போது நாகேஷ் பாலச்சந்தரிடம் சண்டையில் இருந்ததால் இருவரும் பிரிந்து இருந்தனர். சொல்லப்போனால் நாகேஷின் இடத்தை பூர்த்தி செய்வதற்காகவே கமல்ஹாசனை தேர்ந்தெடுத்திருந்தார் இயக்குனர் பாலச்சந்தர்.
அதற்கு தகுந்தார் போல நடிகர் கமல்ஹாசனும் ஒல்லியான தேகத்தை கொண்டு பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நாகேஷ் போலவே இருந்தார். ஆனால் நாகேஷிடம் கிடைத்த அந்த தனிப்பட்ட நடிப்பு கமல்ஹாசனிடம் கிடைக்கவில்லை. இதனால் எப்போதும் கமல்ஹாசனை நாகேஷுடன் ஒப்பிட்டு பேசி வந்தார் பாலச்சந்தர்.
கடுப்பான கமல்ஹாசன் ஒரு நாள் நாகேஷை நேரில் சென்று சந்தித்து எப்போதும் உங்களைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு மிகவும் கோபமாக வருகிறது வருகிற கோபத்திற்கு அவர் மேல் தலையணையை வைத்து அமுக்கி கொன்று விடலாம் என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.
ஆனால் பிறகு கமல்ஹாசன் சினிமாவில் பெரிதாக வளர்வதற்கு பாலச்சந்தரே உதவினார். இந்த விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: அமெரிக்காவிலும் கொடி நட்ட ரஜினி படம்… இப்போது வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியவில்லை!..