தமிழ் சினிமா 80’s, 90’sகளில் தயாரிப்பாளர்கள் வசம் இருந்தது.அவர்கள் தான் கதைகளை கேட்டு ஹீரோக்களை தேர்வு செய்து வந்தனர். 2000-திற்கு பின்னர், அது ஹீரோக்களின் வசமானது. ஹீரோக்கள் இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்து, அவர்கள் யாரை தயாரிப்பாளர்கள் என்று கூறுகிறார்களோ அவர்கள் தான் படத்தின் தயாரிப்பாளர்கள் என்ற நிலைமை தற்போது வரை உள்ளது.
தயாரிப்பாளரின் செயல்பாடுகள் சிலநேரம் பிடிக்காமல் போய் விட்டால், அடுத்த முறை அந்த தயாரிப்பாளர் பக்கம் அந்த ஹீரோ செல்ல மாட்டார். மேலும், சில நடிகர்கள் தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்பது வரை தெளிவாக இருப்பர்.
அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், கமல்ஹாசனை வைத்து ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ எனும் திரைப்படத்தை 2004 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது.
இதையும் படியுங்களேன் – அதெல்லாம் சொல்லவே கூடாது.! வட்டி மட்டும் 10 கோடி., யாரும் இரக்கம் காட்டல.! கடும் கோபத்தில் விஜய் சேதுபதி.!
அதனை தொடர்ந்து, மீண்டும் கமல்ஹாசனை வைத்து படமெடுக்க கமலிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குனர் சரண். இதற்கு கமலும் சம்மதித்து இருந்தாராம். அதற்காக கமலிடம் 1 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரண் கமலின் சம்மதத்தை வைத்து வேறொரு தயாரிப்பாளரிடம் அதனை கைமாற்றி அவருடன் சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டாராம் .
இதனை அறிந்த கமல், தனக்கு தெரியாமல், தனக்கு பிடிக்காத தயாரிப்பாளரை அணுகியுள்ளார். சரண் இப்படி ஒரு வேலை செய்துள்ளார் என்று தெரிந்தவுடன், சரணுக்கு கொடுத்த வாக்குறுதியை திரும்ப பெற்று கொண்டாராம். அந்த அட்வான்ஸ் தொகையையும் வெகு நாட்கள் கழித்து நீதிமன்றம் வரை சென்று தான் இயக்குனர் சரண் 1 கோடி ரூபாய் பணத்தை கமலிடம் இருந்து திரும்ப பெற்றாராம்.
இந்த செய்தியை அண்மையில் ஒரு முன்னணி சினிமா பத்திரிகையாளர் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு சரண் இயக்கத்தில் ஒரு படம்கூட கமல்ஹாசன் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…