அடுத்த குறி உங்களுக்கு தான்.! பதறிப்போய் இருக்கும் கமல்ஹாசன்.!

Published on: April 14, 2022
---Advertisement---

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகிவிட்டன. பிப்ரவரி மாதம் வலிமை, அடுத்த மார்ச் மாதம் ராதே ஷ்யாம், எதற்கும் துணிந்தவன், RRR என வரிசையாக வெளியாகி விட்டன.

நேற்று தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படமும் வெளியாகிவிட்டது. இன்று உலகம் முழுக்க கேஜிஎப் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும் கோலாகலமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனை அடுத்து எந்த பெரிய படமும் வெளியாவதாக தெரியவில்லை. அடுத்ததாக காதுவாக்குல ரெண்டு காதல், மே மாதம் மாமனிதன், டான் போன்ற படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக காத்து இருக்கின்றன.

 பீஸ்ட், கேஜிஎப்-2, RRR போன்று  ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் –  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாக காத்திருக்கும் விக்ரம் படத்திற்கு தான். வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. கமலுடன்  , விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – வலிமையை மிஞ்சிய பீஸ்ட்.! ஆனா இது நீங்க நினைப்பது இல்லை.!

இணையத்தில் தற்போது ரசிகர்கள் அடுத்து கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு தான் காத்திருக்கிறோம் என்ற அளவுக்கு தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் விக்ரம் படம் ரிலீஸ் இதுவரை இல்லாத கமல்ஹாசன் படஙக்ளை விட அதிகாமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கான கூடுதல் பொறுப்பும் தற்போது விக்ரம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளது. அதனை  காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டமும் தற்போது அவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment