கமலுக்கும் இருக்கும் பெருந்தன்மை ரஜினிக்கு இல்லை!.. இந்த விஷயத்துல கிரேட் உலக நாயகன்தான்!..

by சிவா |
rajini kamal
X

பாலச்சந்தரின் இயக்கத்தில் ஒரு சின்ன வேடத்தில் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தின் ஹீரோ கமல். அதாவது ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கமல் ஒரு ஸ்டார். இதை ரஜினியே பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார். எனவே, கமலிடம் மரியாதையாக பேசுவார் ரஜினி. இப்போதும் அது தொடர்வது பல சினிமா மேடைகளில் நாம் பார்க்க முடியும்.

பொதுவாக ஒரு ஸ்டார் நடிகர் தன்னுடன் மற்றொரு நடிகர் இரண்டாவது ஹீரோ போல படம் முழுக்க வருவதை விரும்ப மாட்டார். எம்.ஜி.ஆர் எப்போதும் தனது படங்களில் ஹீரோவோக நடிக்கும் இன்னொரு நடிகர் நடிக்க சம்மதிக்க மாட்டார். ஒன் மேன் ஷோ என்பதுதான் அவரின் ரூட். ஆனால், கமல் அப்படி இல்லை. ரஜினியுடன் பல படங்களை திரையை பகிர்ந்து கொண்டார்.

rajni kamal

பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும். இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், ஆடு புலி ஆட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். கமல் ஈகோ பார்க்கவில்லை. அதனால், ரஜினி தன்னுடன் நடிப்பதை அவர் அனுமதித்தார். அதேநேரம், ஹீரோவுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தை பிரிந்து ரஜினிக்கும், கமலுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர்.

அதை மாற்றவே ‘இனிமேல் நீங்கள் நானும் சேர்ந்து நடிக்க வேண்டாம். தனியாக படங்கள் செய்வோம்’ என சொன்னார் கமல். ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டு பைரவி படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் சூப்பார்ஸ்டாராகவும், கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் ரஜினி.

kamal rajini

அதேநேரம், கமலுக்கு இருந்த பெருந்தன்மை ரஜினியிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹீரோவாக நடிக்க துவங்கிய பின் ரஜினி தனக்கு இணையாக எந்த நடிகரையும் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பியதில்லை. அப்படி நடிக்க வைத்தாலும் அவர்களின் வேடம் நெகட்டிவ் ரோலாக இருக்கும். அதில் ரஜினி தெளிவாக இருப்பார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடிக்க ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன். நெல்சன் இதை ரஜினியிடம் கேட்டபோது ‘வேண்டாம். இது என் படமாக மட்டுமே இருக்க வேண்டும்’ என சொன்னாராம். மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோர் கூட ஒரு காட்சியில் வரும் கேமியோ வேடம்தான். இப்போதும் ரஜினியுடன் நடிக்க கமல் ரெடியாகவே இருக்கிறார். பல மேடைகளில் இதை சொல்லி இருக்கிறார் கமல். ஆனால், ரஜினி அப்படி சொன்னதே இல்லை. சொல்லவும் மாட்டார்.

ரஜினியும், கமலும் இணைந்து மீண்டும் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால், ரஜினி ஒத்துகொள்ளவே மாட்டார் என்பதுதான் கசப்பான உண்மை!..

Next Story