கமலுடன் திருமணம் வரை சென்ற பிரபல நடிகை…! ஒற்றை கேள்வியால் அழிந்த காதல்..!
Kamal Hassan: கமல்ஹாசன் எப்போதுமே தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக தான் வலம் வந்து கொண்டு இருந்தார். அவரை நிறைய நடிகைகள் லவ் செய்தாலும் கல்யாணம் வரை சென்று நின்ற இந்த நடிகையுடனான காதல் பலராலும் கிசுகிசுவாகவே முடிந்து இருக்கிறது.
அபூர்வ ராகங்கள் உட்பட சில படங்களின் மூலம் கமலுடன் நாயகியாக நடித்தவர் ஸ்ரீவித்யா. அப்போதே இருவருக்கும் ஒருவர் மீது காதல் மலர்ந்தது. தொடர்ச்சியாக இணை பிரியாத ஜோடியாக இருக்கின்றனர். இந்த விஷயம் மீடியாவில் கிசுகிசுவாக மாறியது. ஸ்ரீவித்யா தன்னுடைய இறுதி காலத்தில் கமலை மட்டுமே பார்த்தார்.
இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்!.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?
அப்போதும் அது தலைப்பு செய்தியாக மாறியது. இந்நிலையில் இருவரும் காதல் குறித்து அளித்த பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஸ்ரீவித்யா பேசும்போது எனக்கும், கமலுக்கும் காதல் இருந்தது மொத்த திரையுலகத்துக்குமே தெரியும்.
எங்க இரண்டு வீட்டுக்குமே தெரியும். அவர்கள் நாங்க கல்யாணம் செஞ்சிக்கணும் என நினைத்தார்கள். ஆனால் ஒருநாள் என் அம்மா எங்களை அழைத்து பேசினார்கள். கமல் நீ பெரிய நடிகனாக வேண்டும். அவளுக்கும் திறமை இருக்கு. அவளும் நாயகியாக வேண்டும் என்றனர். அது எங்க காதலுக்கு பிரிவாகவே இருந்தது.
இதையும் படிங்க: லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் பிக்பாஸ்! பணப்பொட்டியை தூக்கப் போகும் அந்த போட்டியாளர்?
மொத்தமாக உடைந்து விட்டேன். அவர் இனி எனக்கு இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேப்போல, கமல் கொடுத்த பேட்டியில், ஒரு போட்டோவை காட்டி அது என்னுடைய 19 வயதில் எடுத்தது. என்னுடைய காதலி. இந்த படத்தால் காதல் வந்ததாக கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால் எங்க இருவருக்கும் அது கிடைத்தது. எப்போதுமே அது இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கமல் பேசிய வீடியோவுக்கு: https://www.instagram.com/reel/C1iyzr2xLyA/
80களில் இந்த காதல் கதை கிசுகிசுவாக பேசப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த பழைய வீடியோவால் இரண்டு பேரும் காதலித்தது உண்மை தான். சூழ்நிலை அவர்களை சேராமல் பிரித்ததாக ரசிகர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவித்யா சொன்ன பேட்டி: https://www.instagram.com/reel/C1dsXfuxJOH/