ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் 4 திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2024-04-16 13:50:24  )
ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் 4 திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?
X

Kamalhassan: தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவின் படம் பண்டிகை நாட்களில் ஒன்று வருவதற்கே பெரிய போராட்டமாக இருக்கும் நிலையில், ஒரு வருடத்தின் தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் நான்கு முக்கிய திரைப்படங்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

தமிழில் முதல்முறையாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரில்லர் திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்தனர். 1978ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் ரிலீஸான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தில் கமல்ஹாசன் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..

ஆர்.சி.சக்தி இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இப்படம் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதே நாளில் வெளியான இன்னொரு திரைப்படம் அவள் அப்படித்தான். இப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் மூவரின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நிறைய பேட்டிகளில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இப்படத்தினை குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

1978ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியே ரிலீஸான இன்னொரு திரைப்படம் தப்பு தாளங்கள். இப்படத்தினை பாலசந்தர் இயக்கி இருந்தார். ரஜினிகாந்த் மற்றும் சரிதா முக்கிய வேடத்தில் நடிக்க கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இதில் ரஜினிகாந்தின் இரண்டு படங்கள் இருந்தது. ஆனால் அந்த தீபாவளி ரேஸில் கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் மிகப்பெரிய அளவில் சாதனையை படைத்தது. கிட்டத்தட்ட 175 நாட்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Next Story