உலகநாயகன் கமலுக்காக மழை செய்த அந்த விஷயம்… வாயடைத்து போன படக்குழு…

by Akhilan |   ( Updated:2024-08-13 07:23:56  )
உலகநாயகன் கமலுக்காக மழை செய்த அந்த விஷயம்… வாயடைத்து போன படக்குழு…
X

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளைப் பட்டியலிட்டால் பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்துக்கு எப்போதும் முக்கியமான இடம் இருக்கும். அந்தப் படத்துக்குப் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன.

கவிஞர் கண்ணதாசன் மறைவுக்கு முன் இறுதியாக எழுதிய பாடல்தான் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணே கலைமானே’. அதேபோல், விஸ்வாசன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் மூன்றாம் பிறை.

இதையும் படிங்க: சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

கமல் - ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஒய்.ஜி.மகேந்திரன், காந்திமதி, பூர்ணம் விஸ்வநாதன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தை திரைக்கதை எழுதி இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்திருந்தார் பாலுமகேந்திரா. 1982-ல் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி வசூல் மழை பொழிந்த இந்தப் படம் விருதுகளையும் குவித்தது.

சிறந்த நடிகராக கமலுக்கும் ஒளிப்பதிவுக்காக பாலுமகேந்திராவும் விருது பெற்றனர். படத்தின் பாடல்கள் அளவுக்கு பெரிதாகப் பேசப்பட்டது இதன் கிளைமாக்ஸ் காட்சிகள். அதில், கமலின் நடிப்பு இன்றளவும் சிலாகிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கும் முன் ரிகர்சல் பார்த்துவிட்டுதான் எடுத்திருக்கிறார்கள். ஷாட் எடுக்கும்போது, மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. திரைக்கதையில் மழை இல்லை என்றாலும் பாலுமகேந்திரா ஷூட்டிங்கைத் தொடர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: டிஆர்பியில் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… ஷாக்கான ரசிகர்கள்

அதேபோல், ரயில் நகர ஸ்ரீதேவியைப் பார்த்துக்கொண்டே ஓடிவரும் கமல், இடையில் இருந்த மின்கம்பத்தில் இடித்து கீழே விழுந்து, எழுந்து ஓடிவருவார். இந்த காட்சி திட்டமிட்டு நடந்தது இல்லை. காட்சியை மெருகேற்ற கமல், தாமாகவே யோசித்து அந்த இடத்தில் நடிக்கவே அது படக்குழுவினருக்கு ரொம்பவே பிடித்திருந்ததாம். ஒரே டேக்கில் கமல் நடித்ததை பாலுமகேந்திராவும் ஓகே செய்திருக்கிறார்.

Next Story