Connect with us

Cinema News

கமல் கொடுத்த ஒரே வரி… பிடித்துக்கொண்ட லோகேஷ்… அட இது தெரியாம போச்சே!…

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கார்த்தி, விஜய், கமலை அடுத்து தற்போது ரஜினியின் கூலி பட வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார். கமலின் தீவிர ரசிகரான இவர் விக்ரம் படத்தின் கதையை உருவாக்கியதின் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது.  

கமல் – லோகேஷ் படத்துக்கான விதை 2020-ல் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்வில் போடப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியில் மக்களின் அபிமான இயக்குநர் என்கிற விருதை கமல்ஹாசன் கையால் கைதி படத்துக்காக லோகேஷ் பெற்றார்.

அந்த மேடையில் பேசுகையில், `நான் எந்தப் படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. ஆனால், கமல் சாரின் அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன்’ என்று நெகிழ்ந்திருப்பார். இத்தோடு தான் எவ்வளவு பெரிய கமல் ரசிகர் என்பதையும் அந்த மேடையிலேயே சொல்லியிருப்பார் லோகேஷ் கனகராஜ். அவரின் இந்த தன்மையான பேச்சும், திறமையும் கமல்ஹாசனை கவரவே, நிச்சயம் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. 

இந்த நம்பிக்கையே கடாரம் கொண்டான் படத்துக்குப் பிறகு இடைவெளி எடுத்திருந்த தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலையும் கமல் உள்ளே கொண்டுவர முக்கியமான காரணமாகவும் இருந்தது. விஜய்யோடு மாஸ்டர் படத்தை முடித்தபிறகு லோகேஷை அழைத்து பேசியிருக்கிறார் கமல்.  

அப்போது லோகேஷ் ஒன்றிரண்டு ஒரு வரி கதைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த கலந்துரையாடலின்போது கமல் சொன்ன ஒரு வரிதான் விக்ரம் உருவாக அடிப்படை. 35 ஆண்டுகளுக்கு முன் எடுக்க நினைத்த அந்த கதை பற்றிய ஒருவரியை கமல் சொல்லியிருக்கிறார்.

உடனே அது பிடித்துப்போகவே, அதை வைத்துக்கொண்டு 6 மாதங்கள் திரைக்கதையாக்கியிருக்கிறார் லோகேஷ். ஸ்கிரிப்டை முழுவதும் படித்துவிட்டு நிறைய கரெக்‌ஷன்கள் சொல்வார் என்று எதிர்பார்த்து லோகேஷ் கமலை சந்திக்கச் சென்றபோது, `இது முழுக்க முழுக்க உங்க வேர்ல்டா இருக்கு. இதுல நான் ஒரு நடிகனா மட்டும் வர்றேன்’ என்று ஓகே செய்ததுதான் விக்ரம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top