Cinema History
கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..
கமல் தமிழ் திரையுலகில் 32 படங்கள் வெள்ளி விழாவாக கொடுத்துள்ளார். அவற்றில் சில முக்கியமான படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
1980ல் கமல் நடிப்பில் வெளியான படம் வறுமையின் நிறம் சிவப்பு. கமல் உடன் ஸ்ரீதேவி, பிரதாப்போத்தன், எஸ்.வி.சேகர், திலீப் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இப்படம் மதுரை, கோவை, திண்டுக்கல், சென்னை, பெங்களூரு உள்பட பல நகரங்களின் திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது. எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
1986ல் கே.எஸ்.விஸ்வநாத் இயக்கிய படம் சிப்பிக்குள் முத்து. கமல், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கதைக்கேற்ப கமல் அருமையாக நடித்திருந்தனர்.
1983ல் கே.விஸ்வநாத் இயக்கிய படம் சலங்கை ஒலி. கமல், ஜெயப்பிரதா உள்பட பலர் நடித்துள்ளனர். பல விருதுகளை வென்ற படம். மதுரை, கோவை, திண்டுக்கல், நாகர்கோவில் பெங்களூரு உள்பட பல நகரங்களில் வெள்ளி விழா கண்டது. படத்தில் கமலின் பரதநாட்டியம் அபாரமாக இருக்கும்.
1979ல் வெளியான படம் ஜப்பானில் கல்யாணராமன். இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சத்யராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். மதுரை, கோவை, திண்டுக்கல், திருவண்ணாமலை, குடியாத்தம், திருச்சி, வேலூர் உள்பட பல இடங்களில் வெள்ளி விழா கண்டது.
1979ல் வெளியான படம் நீயா. கமல், ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்திருந்தனர். மதுரை, கோவை, திண்டுக்கல், பெங்களூரு உள்பட பல இடங்களில் வெள்ளி விழா ஓடியது. 1989ல் பிரதாப் போத்தன் இயக்கிய படம் வெற்றி விழா. கமல், பிரபு உள்பட பலர் நடித்திருந்தனர். மதுரை, கோவை, திண்டுக்கல், நாகர்கோவில், திருச்சி, சேலம், கரூர் உள்பட பல இடங்களில் வெள்ளி விழா ஓடியது.
இதையும் படிங்க… டாப் 10 நடிகர்களின் முதல் 100 கோடி வசூல்!. என்னென்ன படங்கள்?.. வாங்க பார்ப்போம்!..
1994ல் வெளியான படம் மகளிர் மட்டும். இந்தப் படத்தை சங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இது ஒரு காமெடி படம். பல திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. கமல், ரேவதி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். 1995ல் சதிலீலாவதி படத்தை பாலுமகேந்திரா இயக்கியுள்ளார். கமல், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர்.
மதுரை, கோவை, திண்டுக்கல், சேலம், நாகர்கோவில், குடியாத்தம் உள்பட பல இடங்களில் வெள்ளி விழா கண்டது. இந்தப் படத்தில் யாருமே எதிர்பாராத வகையில் நகைச்சுவை நடிகை கோவை சரளாவை ஜோடியாகப் போட்டு கொங்குத் தமிழ் பேசி கமல் ஜாலியாக நடித்துள்ளார்.