Connect with us
Top 10 heroes

Cinema History

டாப் 10 நடிகர்களின் முதல் 100 கோடி வசூல்!. என்னென்ன படங்கள்?.. வாங்க பார்ப்போம்!..

தமிழ்த்திரை உலகில் டாப் 10 முன்னணி நடிகர்களின் படங்களைப் பார்த்தாலே நமக்கு செம சூப்பராக இருக்கும். அவர்களது முதல் 100 கோடி வசூல் படங்கள் என்றால் எப்படி இருக்கும்? வாங்க அதெல்லாம் பார்ப்போம்.

2019ல் நடிகர் தனுஷின் அசுரன் 100 கோடி வசூல். கலைப்புலி தாணு 150 கோடின்னு சொன்னார். ஆனால் 2022ல்  மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் தான் முதல் 100 கோடி வசூல். இதோட பட்ஜெட் 30 கோடி. வசூல் 110 கோடி. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தான் அவருக்கு முதல் 100 கோடி வசூல். நெல்சனின் திரைக்கதை தான் வெற்றிக்குக் காரணம். பட்ஜெட் 40 கோடி தான்.

இதையும் படிங்க… காத்தடிச்சு தூக்கிய குட்டி பாவாடை!.. ஜெயம் ரவி ஜோடி மானமே போயிருக்கும்!.. என்ன ஆச்சு தெரியுமா?..

2019ல் வெளியான கைதி தான் கார்த்தியின் முதல் 100 கோடி வசூல் என சாதனை படைத்தது. லோகேஷ் தான் இந்த வெற்றிக்குக் காரணம். பட்ஜெட் 25 கோடி. வசூல் 105 கோடி. 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் தான் ஜெயம் ரவியின் முதல் 100 கோடி வசூல் படம். 15 கோடி பட்ஜெட். வசூல் 105 கோடி.

2015ல் டைரக்டர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படம் தான் விக்ரமின் முதல் 100 கோடி வசூல் படம். 100 கோடி பட்ஜெட். 239 கோடி வசூல். 2013ல் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியான ஆரம்பம் தான் அஜீத்தின் முதல் 100 கோடி வசூல் படம். 60 கோடி பட்ஜெட். வசூல் 124 கோடி.

இதையும் படிங்க… ரீ ரிலீஸில் அள்ளிய வசூல்.. ஆனாலும் யாரையும் சந்திக்காத கில்லி பட இயக்குனர்!.. இதுதான் காரணமா?!..

சூர்யாவுக்கு சிங்கம் 2 படம் தான் முதல் 100 கோடி வசூல். டைரக்டர் ஹரியின் இந்தப் படம் செம ஸ்பீடா இருக்கும். 45 கோடி பட்ஜெட். 136 கோடி வசூல். 2012ல் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி தான் விஜய்க்கு முதல் 100 கோடி வசூல் படம். 62 கோடி. 121 கோடி வசூல்.

கமலின் முதல் 100 கோடி வசூல் படம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய தசாவதாரம். 60 கோடி பட்ஜெட். ஆனால் வசூல் 200 கோடி. 2007ல் வெளியான சிவாஜி தான் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு முதல் 100 கோடி வசூல் படம். டைரக்டர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். 89 கோடி பட்ஜெட். வசூல் 160 கோடி.

google news
Continue Reading

More in Cinema History

To Top