சம்பளமே வாங்காமல் கமல் நடித்து கொடுத்த படம்... ஆனா நடந்தது தான் சோகமே!
கமல் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை எப்போதுமே மறக்கமாட்டார். அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை அவ்வப்போது செய்துவிடுவாராம். அப்படி ஒரு சுவாரஸ்ய நிகழ்வாக அமைந்தது தான் மகராசன் திரைப்படம்.
1993ல் ஜி என் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மகராசன். கமல், பானுப்பிரியா, வி கே ராமசாமி, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் திரைக்கு வந்தது. இன்றும் கமலின் கேரியரில் இப்படம் மோசமான படமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் கமல் ஒப்புக்கொண்டதற்கு ஒரு பெரிய காரணமே இருக்கிறதாம்.
கமலின் கோகிலா, கல்யாண ராமன், கடல் மீன்கள் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் ஜி.என்.நாகராஜன். அப்போது இவருக்கு பல படங்கள் தோல்வியை தழுவியது. அதனால் மோசமான நிலையில் இருந்தவருக்கு உதவியாக கமல் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் மகராசன். இப்படத்திற்காக கமல் சம்பளம் கூட வாங்கவில்லையாம்.
தொடர்ச்சியாக, படத்தின் காட்சிகளில் எதுவும் தலையிட்டால் அதுவும் தோல்விக்கு வழிவகுத்துவிட கூடாது என்பதற்காக நடிப்பதில் மட்டுமே கமல் கவனம் செலுத்தினாராம். ஆனால் அப்படமும் துரதிஷ்டவசமாக தோல்வியை தான் தழுவியது. ஜி என் நாகராஜனும் சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.