பாலிவுட்டையே கதிகலங்க வைத்த கமலின் படம்!.. 25 வருடங்களை கடந்தும் கர்ஜிக்கும் உலகநாயகன்..

kamal
தமிழ் சினிமாவில் சிவாஜியை அடுத்து நடிப்பில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக கமல் திகழ்ந்து வருகிறார். அவர் சினிமா மீது வைத்திருக்கும் காதல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. சிவாஜி எந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் தவப்பிள்ளையாக விளையாடினாரோ அதற்கு மேல் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறார் கமல்.

kamal1
கமல் நடித்த படங்கள் ஒவ்வொன்றிற்கும் மாறுபட்டது. அவருடைய படங்களை எடுத்துப் பார்த்தால் எந்த அளவுக்கு மெனக்கிடுகிறார் என்பது தெரியும். அது இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சினிமாவில் புதிது புதிதாக ஏதாவது அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பவர் கமலாகத்தான் இருக்கும்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரமிப்பை ஏற்படுத்திய நடிகர் கமல். 60 வருடங்களை கடந்தும் இன்னும் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து தனது உழைப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார்.

siddharth anand
இந்த நிலையில் சமீபத்தில் இறக்கத்தில் இருந்த பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். இவர் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த படமான ‘பதான்’ படத்தை இயக்கியவர். கிட்டத்தட்ட 240 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 1000 கோடியை தாண்டி வசூலை பெற்று சாதனை படைத்தது.
இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ‘படம் பார்க்க போகிறோம் என்றால் அந்தப் படம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும், படம் நம்மை அழ வைக்கனும், அப்போது அந்தப் படம் நம்மை போரடிக்கவைக்க வில்லை என்று தோன்றும்’ என்று படத்தை பற்றி கூறிய சித்தார்த்,

kamla3
அப்படி பட்ட ஒரு திரைப்படம் தான் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படம் என்று கூறினார். அந்த தாக்கத்தை நாயகன் படம் என்னிடம் ஏற்படுத்தியது என்றும் கூறியிருந்தார்.