More
Categories: Cinema News latest news

நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.! நான் அந்த விஷயத்தில் தலையிட மாட்டேன்.! ஒதுங்கிவிட்ட கமல்.!?

தமிழ் சினிமாவில் 40 வருடங்களை கடந்த சூப்பர் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி – கமல் எனும் ஜாம்பவான்கள் இன்னும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு போட்டி போட்டு விட்டுக்கொடுக்காமல் நடித்து வருகின்றனர். அவர்களும் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களை நாடி வருகின்றனர்.

Advertising
Advertising

அப்படி, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ள  படங்களில் முக்கியமானது விக்ரம் திரைப்படம். உலகநாயகன் கமல்ஹாசன், இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து  முடித்துள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் கமல் பட சுவடுகள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது.

ஆம், கமல் படத்தில் எப்போதும் கமலுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்த படத்தில் கமல் தன்னுடன் நடிக்கும் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோருக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் இடம் கொடுத்து நடித்து முடித்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – பல வருடங்களாக விஜய் ஏன் பேட்டி கொடுக்கவில்லை.!?…திடுக்கிடும் ஆதாரம் இதோ..,

இந்த திரைப்பட அனுபவம் பற்றி அண்மையில், லோகேஷ் கூறுகையில், இந்த படத்திற்காக கமல் சாரிடம் ஏதும் யோசனை கேட்கலாமா என நினைத்திருந்தேன். ஆனால், கமல் சார் , இது உன் படம் நீ என்ன வேண்டுமானாலும் செய் என முழு சுதந்திரம் கொடுத்தார். அவரிடம் அனுமதி கேட்கும் எந்த சந்தர்ப்பத்தையும் அவர் உருவாக்கி தரவில்லை. இது முழுக்க முழுக்க எனது இயக்கத்தில் உருவான திரைப்படமாக வந்துள்ளது என மிகவும் மகிழ்ச்சியாக லோகேஷ் கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எப்போது அந்த ஜூன் 3 வரும். விக்ரமின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Published by
Manikandan

Recent Posts