சர்ச்சை நடிகையை ரிஸ்க் எடுத்து நடிக்க வைக்கும் ரஜினி பட இயக்குனர்… கொஞ்சம் ஓவராத்தான் போகுது…

Chandramukhi 2
தமிழின் முன்னணி இயக்குனரான பி.வாசு, தமிழில் “நடிகன்”, “மன்னன்”, “உழைப்பாளி”, “சந்திரமுகி” போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது “சந்தரமுகி 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Chandramukhi 2
சந்திரமுகி
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சந்திரமுகி”. ரஜினிகாந்த்தின் சினிமா கேரியரிலேயே ஒரு வித்தியாசமான திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. அதே போல் “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி புதிய சாதனையை படைத்தது.

Chandramukhi
சந்திரமுகி 2
“சந்திரமுகி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து “சந்திரமுகி 2” திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு “சந்திரமுகி 2” திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

Chandramukhi 2
இதில் லாரன்ஸ் ராகவேந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சர்ச்சை நடிகை
இந்த நிலையில் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. கங்கனா ரனாவத் சமீப காலமாக தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்கள் பலவற்றை பேசி வந்தார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு பஞ்சாப் விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றபோது கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: “நான் அந்த படத்துல நடிச்சிட்டு வரேன்”… படக்குழுவினரிடம் அடம் பிடித்த வடிவேலு… கோபத்தில் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு…

Kangana Ranaut
அதில் “காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்திய அரசை தங்களுக்கு ஏற்றார் போல் வளைக்கலாம். இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒரு காலத்தில் ஒரு பெண் பிரதமர் (இந்திரா காந்தி) தனது காலால் நசுக்கிப்போட்டார். அப்படிப்பட்ட ஒரு நபர்தான் இப்போது தேவை” என அதில் கூறியிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் சீக்கிய அமைப்பினர் கங்கனா ரனாவத்தின் மேல் புகாரும் அளித்தனர். இவ்வாறு சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா.
30 பேருடன் ஷூட்டிங் வரும் கங்கனா

Kangana Ranaut
இந்த நிலையில் கங்கனா ரனாவத் “சந்திரமுகி 2” படத்தில் நடிப்பதற்காக பல கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம். அதாவது மேக்கப் மேன், பாடி கார்டு, சமையல்காரர்கள் உட்பட கிட்டத்தட்ட 30 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் ஹைதராபாத்திற்கு வர உள்ளதாகவும், அவர்களுக்கு ஹோட்டலில் அறை எடுத்துக்கொடுக்க வேண்டும் எனவும், மேலும் தனக்காக மட்டுமே ஹைதராபாத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனி அறை ஒன்றை எடுத்துத்தர வேண்டும் எனவும் நிபந்தனைகள் போட்டிருக்கிறாராம். இந்த நிபந்தனைகளுக்கு லைக்கா நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளதாம்.