Cinema News
Kanguva: கங்குவா சாதா மொக்கை இல்லை… காட்டு மொக்கை!.. புளூசட்ட மாறன் விமர்சனம்!..
கங்குவா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், கலவையான விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இதுகுறித்து பிரபல யூடியூபர் ப்ளூசட்ட மாறன் விமர்சனம் செய்துள்ளார். பார்க்கலாமா…
Also read: சொதப்பிய கங்குவா?!… அப்ப அமரன் 300 கோடி கன்ஃபார்ம்!… எஸ்கே காட்டுல மழை தான் போங்க!…
கங்குவா படத்தோட ஆரம்பத்தில் ரஷ்யாவில் ஒரு ரிசர்ச் சென்டரைக் காமிக்கிறாங்க. அங்க ஒரு பையன் இருக்கான். அவனை விரட்டுறாங்க. அவன் தப்பிச்சி கோவாவுக்கு வந்துடறான். அங்கு பார்த்தா நம்ம ஹீரோ போலீஸே பிடிக்க முடியாத குற்றவாளிகளைப் பிடிக்கிறாரு. அதான் அவரோட வேலை. அந்த சந்தரப்பத்துல அந்தப் பையனை ஹீரோ பார்க்குறான். இவனுக்கு அவரை நல்லாத் தெரியுது.
ஹீரோ அவனுக்கு ஆபத்து இருக்குறதைத் தெரிஞ்சிக்கிட்டு காப்பாத்த முயற்சிக்கிறாரு. இவங்க ரெண்டு பேருக்கும் என்ன உறவுங்கறது தான் கதை. குறிப்பா சொல்லணும்னா ராஜமௌலியோட மகதீரா கதை.
முன்ஜென்மத்துல உள்ள தொடர்பைப் பற்றிய கதை. இப்படி ஒரு படம் எடுக்கப் போறாங்கன்னு அறிவிப்பு வந்ததுல இருந்து எங்களுக்குப் பெரிசா இதுல நம்பிக்கை இல்லை. ஏன்னா சிறுத்தை சிவா மேல எங்களுக்கு அவ்வளவு தான் நம்பிக்கை.
மொக்கைப் படம்
முன்ன எடுத்தப் படமும் அப்படித்தான் இருந்தது. இப்போவும் அவர் அப்டேட் இல்லை. சூர்யாவும் 10 வருஷத்துல ஒழுங்கா கதை கேட்டு நடிச்ச படம்னா ஜெய்பீம் தான். மற்றபடி எல்லாமே மொக்கைப் படம் தான். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து என்ன படம் பண்ணிறப்போறாங்கன்னு போய் பார்த்தோம். படம் மொக்கையா தான் இருக்கும்னு நம்பிப் போய் பார்த்தா இது காட்டு மொக்கைப் படம்.
அதுக்கு முக்கியமான காரணம் கோவா போர்ஷன் தான். அது அவ்வளவு படுகேவலமா இருந்தது. யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி காமெடி எல்லாம் சகிக்கல. எப்படா முடியும்னு பார்த்தா பிளாஷ்பேக். அப்பாடா இதுக்கு அப்புறம் கதை சொல்வாங்கன்னு பார்த்தா ரெண்டு ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்லங்கற மாதிரி ஆகிடுச்சு. எப்படா படம் முடியும்னு ஆகிடுச்சு. யாரு நேரடி வில்லன், அந்தக் கும்பலுக்கும், ஹீரோவுக்கும் என்ன பிரச்சனைன்னே தெரியலை.
காட்டுக்கத்தல்
எல்லாமே காட்டுக்கத்தலாத் தான் கத்திக்கிட்டு இருக்காங்க. இந்தப் படத்தைப் பார்க்கும்போது தூங்காம இருந்ததுக்கு காரணம் மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத் தான். எதை எதை எல்லாம் தட்டுனா சத்தம் வருமோ அதை எல்லாம் தட்டிருக்காரு. பாத்திரக்கடையில போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருப்பாரு போல.
Also read: Kanguva: அமரனை முந்தியது கங்குவா… முதல் நாள் வசூல் எத்தனை கோடின்னு பாருங்க…!
இதை எல்லாம் மீறிப் போய் சிலரு தூங்கிக்கிட்டு இருக்காங்க. அவன் எத்தனை கங்குவாவ கடந்து வந்துடுவான்? இந்த லட்சணத்துல தியேட்டர்காரங்க கோரிக்கை வச்சிருக்காங்க. 250 ரூபாய் டிக்கெட் விற்க அனுமதிச்சா படுத்துக்கிட்டே படம் பார்க்க இருக்கை வச்சிடுவோம்னு சொல்றாங்க. உட்காருற சீட்லயே தூங்குறான். தூங்குற சீட் வச்சா கொசுவர்த்தி எல்லாம் கொண்டு வர மாட்டானா?
1000 கேள்வி
சின்னப்பையனா, பொண்ணான்னு கூட விளங்கல. அது அடிக்கடி கோவிச்சிட்டுப் போயிடுது. அதைக் கன்வின்ஸ் பண்றதே ஹீரோவுக்கு வேலையா போயிடுது. படம் முடிகிற முன்னாடி சண்டை. அதையும் 1000 வருஷத்துக்கு முன்னாடி நடக்குற சண்டையையும் மாத்தி மாத்திக் காட்டுறாங்க. எதுக்குத்தான் சண்டையைப் போடுறாங்கன்னே தெரியல. படம் முடிகிறதுக்குள்ள 1000 கேள்வி வரும்.
சின்னப்பையனை வச்சிக்கிட்டு ரிசர்ச் சென்டர்ல என்ன பண்றாங்க? அவன் ரஷ்யாவுல இருந்து தப்பிச்சி கோவா வந்து கரெக்டா ஹீரோகிட்ட எப்படி வந்தான்? ஹீரோ கத்தியை எடுத்து முதலை மேல ஒரு கோடு போட்டா செத்துடுது. ஆனா இவருக்கு கத்தியை எடுத்து இந்தப் பக்கம் குத்தி அந்தப்பக்கம் எடுத்தாலும் ஒண்ணுமே ஆகறதுல்ல. அதை எல்லாம் கேட்டா அதுக்கு சரியான விளக்கம் பார்ட் 2ல வச்சிருக்கோம்னு சொல்வாங்க. உங்க விளக்கமும் வேணாம். விளக்குமாறும் வேணாம்.
செத்தவன் கையில வெத்தலப்பாக்கு
பார்ட் 2 மட்டும் எடுக்காம இருந்தா அதுவே போதும். படம் முடியும்போது ஒரு கேமியோ ரோலைக் கொண்டு வந்து விடுறாங்க. எல்லாரும் ரொம்ப பிரமிப்பா பார்ப்பாங்கன்னு நினைச்சா செத்தவன் கையில வெத்தலப்பாக்குக் கொடுத்த மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்தப் படத்துக்கு ஒரு மீம் போட்டுருந்தாங்க.
காட்டு மொக்கப் படம்
காட்டு மொக்கப் படம் எடுக்கறவங்களைப் பார்த்துருக்கோம். ஆனா காடு காடாப் போய் மொக்கப் படம் எடுக்கறவங்கள இப்ப தான் பார்த்துருக்கோம். அந்த மீம் இந்தப் படத்துக்கு ரொம்ப கரெக்டா இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.