Kanguva: சூர்யா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தில் பலரும் எதிர்பார்த்து வந்த ஒரு விஷயம் நடக்காமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கங்குவா திரைப்படம்: ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமகாலம் மற்றும் பல வருடத்திற்கு முந்தைய வரலாற்று கதை என இரண்டு பக்கங்களையும் கங்குவா திரைப்படம் சொல்லை இருக்கிறது. பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் இப்படம் நாளை நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையும் படிங்க: இப்படி நீங்க பண்ணக்கூடாது?!… அமரன் டீமுக்கு முக்கிய கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள்!…
கங்குவா ரிலீஸ்: கங்குவா திரைப்படம் உலகம் எங்கிலும் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக நடிகர் சூர்யா கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று ரசிகர்களை படக்கூடுவோம் சந்தித்து வருகிறது.
கங்குவா கார்த்தி: இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியான போதே ஒரு கேரக்டர் பிளர் செய்யப்பட்டு காட்டப்பட்டு இருந்தது. அதை பலரும் கணித்து நடிகர் கார்த்தியாக தான் இருக்கும் என பேசி இருந்தனர். அதுபோல இரண்டாவது ட்ரெய்லரின் கடைசியிலும் ஒரு கேரக்டரின் வாய்ப்பகுதி மட்டுமே காட்டப்பட்டது.
இதனால் கங்குவா திரைப்படத்தில் கார்த்தி இருப்பது உண்மைதான் என பலரும் அடித்து பேச தொடங்கினர். ஆனால் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இல்லை என பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தின் சிறப்பு காட்சி!… ஆனா இங்க மட்டும் 7 மணிக்கு?!.. குஷியில் சூர்யா ரசிகர்கள்!…

ஆனால் இதையும் கணித்த ரசிகர்கள் ஒருவேளை கார்த்தி கேரக்டராக தான் இருக்கிறார். நடிகர் கார்த்தியாக படத்தில் இல்லை என்பதை தான் மதன் கார்த்தி அப்படி சொல்கிறாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. எதுவாக இருந்தாலும் நாளை இதற்கான விடை தெரிந்து விடும் என்பது முக்கிய விஷயமாக மாறி இருக்கிறது.
