Connect with us

Cinema News

சூர்யாவுக்கு தலைவலியாக மாறிய கங்குவா!.. 300 கோடி பட்ஜெட் கொஞ்சம் மிஸ் ஆனாலும் அக்‌ஷய் பட கதி தான்!..

தன்னை ஒரு டயர் ஒன் நடிகராக காட்டிக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்புடன் நடிகர் சூர்யா 300 கோடி பட்ஜெட்டில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த பட்ஜெட் அளவுக்கு படம் எப்படி வசூல் செய்யும் என்கிற பயம் அதிகமாகவே சூர்யாவுக்கு உள்ளதாக செய்யாறு பாலு தனது புதிய பேட்டியில் பேசி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடைசியாக தியேட்டரில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதுக்கு பின்னர் சூர்யா மார்க்கெட் மொத்தமாக சரிந்து கிடக்கும் நிலையில், தற்போது கங்குவா படத்தை மட்டுமே மொத்தமாக நம்பியுள்ளார் சூர்யா.

இதையும் படிங்க: சாப்பிட வந்த ரஜினி… தலைதெறிக்க ஓட விட்ட ஓட்டல் உரிமையாளர்…

அந்தப் படத்தை எப்படியாவது ஹிந்தியில் பிசினஸ் செய்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் அதிக நாட்கள் மும்பையில் செலவழித்து வருகிறார். ஞானவேல் ராஜா தனியாக மும்பையில் ஆபீஸ் அமைத்து அங்கேயே உட்கார்ந்து கொண்டு படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

பாபி தியோல் மற்றும் திஷா பதானி என ஹீரோயினும் வில்லனும் பாலிவுட் நடிகர்கள் என்பதால் இந்த படத்தை பாகுபலி ரேஞ்சுக்கு சொல்லி விற்றுவிட திட்டமிடுகின்றார் சூர்யா. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் கங்குவா படத்தை எந்தவொரு விநியோகஸ்தர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதால் பயங்கர மன அழுத்தத்தில் சூர்யா இருப்பதாக செய்யாறுபாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் பாட்டா இது?.. எல்லாமே டபுள் மீனிங்கா கேட்குதே!.. எல்லாம் தனுஷ் பார்த்த வேலையா?..

கங்குவா திரைப்படம் பெரிய போட்டிகள் இல்லாமல் வெளியானால் மட்டுமே போட்ட பணத்தையாவது எடுக்க முடியும் என்றும் 300 கோடி வசூல் வருவதே அதிகம் தான் என்றும் எப்படியாவது 400 முதல் 500 கோடி வசூலை ஈட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால், படம் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வன்மத்தை கக்கி முடித்து விடுவார்கள் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top