Kanguva: தொடங்கியது கங்குவா ப்ரீ புக்கிங்!… இனி வசூல் வேட்டைதான்… இதுவரை எவ்வளவு தெரியுமா?…

Published on: November 13, 2024
---Advertisement---

நாளை வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்-கில் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. முழுக்க முழுக்க ஒரு பீரியட் படமாக இப்படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் சிறுத்தை சிவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து இருக்கின்றார். மேலும் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் பிரபலங்களான திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அந்த இயக்குனருடன் எஸ்.கே?!.. ஃபிளாப் கொடுத்தும் திருந்தலயே!. நல்லாதானே ‘போகுது!..

மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கின்றார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கி இருக்கின்றார். 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா செதுக்கி இருக்கின்றார்.

படத்தில் நடிகர் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிக்கின்றார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. படம் இந்தியா முழுவதும் சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படம் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கூறி வருகின்றார். மேலும் கங்குவா திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 9 மணி தொடங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகள் ஒளிபரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தமிழ்நாடு தவிர அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் பல திரையரங்குகளில் புக்கிங் தொடங்கி இருக்கின்றது. படம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை படம் திரையிடப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான திரையரங்குகளில் முதல் நாளில் அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் 95 சதவீதம் வரை விற்று விட்டது. ஆனால் இது சென்னை மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாடு நிலவரம் விவரம் தான்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: வீட்டை விட்டு வெளியேறிய ‘சுனிதா’வின் முதல் போஸ்ட்… செம மெசேஜ்!

கங்குவா படம் முதல் நாளில் தனது வசூல் கணக்கினை சிறப்பாகவே தொடங்கி இருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.  தமிழகம் தவிர்த்து வெளி மாநிலங்களில் பெரும்பான்மையான திரையரங்குகளில் இன்னும் 20 சதவீதம் டிக்கெட் கூட நிரம்பாமல் இருப்பது படக்குழுவினரிடையே சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

நாளை தான் படம் ரிலீஸ்-ஆக இருப்பதால் அதற்குள் டிக்கெட்டுகள் புக்காகிவிடும் என்று படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும் தற்போது வரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் மட்டும் கங்குவா திரைப்படம் 15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. முதல் நாள் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.