வில்லன் பில்டப் வெறித்தனமா இருக்கு!.. கங்குவா புதிய போஸ்டர் அப்டேட் இதோ!..

by சிவா |
kanguva
X

Kanguva: சினிமாவில் நடிக்க துவங்கிய போது தடுமாறினாலும் காக்க காக்க, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் தன்னை மெருகேற்றிக்கொண்டவர் நடிகர் சூர்யா. ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸாக வந்து கலக்கினார்.

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம்தான் கங்குவார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் இவர். ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை கொடுத்தவர்.

இதையும் படிங்க: 50 ஆயிரம் பாடல்களுடன் ஒப்பிட்டாலும் தனித்து நின்ற பவதாரிணியின் பாடல் இதுதான்…!

அந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்பதால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என அவர் எழுதிய கதைதான் கங்குவார். தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் போல பூர்வ ஜென்மத்தை அடிப்படியாக கொண்ட திரைப்படம் இது. பிளாஷ்பேக் காட்சிகளில் சூர்யா கங்குவாக வந்து மிரட்டியிருக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கவிருக்கிறார். மேலும், திஷா பத்தானி, ரெட்டிங் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிரடி ஆக்சன் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

kanguva

இந்த படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் பாபி தியோல் கலக்கி இருக்கிறாராம். இந்த படத்தில் அவர் உதிரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தொடர்பான போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, இந்த அறிவிப்போடு ஒரு போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தாம்மா…. மெயின் பிக்சரைப் பார்த்துடாதீங்க… நொந்துடுவீங்க..

Next Story