Kanguva: கங்குவா ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியல... கங்குவா 2க்குத் தயாரான இயக்குனர்

kanguva
ஞானவேல் ராஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் கங்குவா படம் வெளியாகி உள்ளது. சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தன.
ஒரே இரைச்சல்
Also read: தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!
அதன்பிறகு நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வர ஆரம்பித்தன. எப்போது பார்த்தாலும் படத்தில் கத்துவதாகத் தான் இருக்கிறது. ஒரே இரைச்சல். படத்துல கதையே இல்லைன்னு சொன்னாங்க.
இப்படி படத்திற்கு கிடைத்துள் வரவேற்பு வசூல், விமர்சனங்கள் எல்லாம் தாண்டி ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தில் பணிபுரிந்தவர்களின் கடின உழைப்பு வீணடிக்கப்படுகிறது. இதுதான் வேதனையான விஷயம்.
காட்டு மொக்கை
இந்தப் படம் வெறும் மொக்கை அல்ல. காட்டு மொக்கை. காடு காடாப் போயி இப்படி ஒரு மொக்கைப் படத்தை எடுத்துருக்காங்க என படத்தைப் பற்றி ப்ளூ சட்டை மாறன் அதிரடியாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் இந்தப் படத்துக்கு 2ம் பாகம் எடுக்காம இருந்தாலே நீங்க எங்களுக்கு செய்ற பெரிய உதவின்னு ப்ளூசட்ட மாறன் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கேம்
படம் வெறும் வீடியோ கேம் மாதிரி தான் இருக்கு. வேற ஒண்ணும் பெரிசாக இல்லை என படம் வெளியாவதற்கு முன்பே வலைப்பேச்சாளர் பிஸ்மி தெரிவித்து இருந்தார். படம் 2000 கோடியை வசூலிக்கும்னு ஞானவேல்ராஜா சொன்னார். அது உயர்ந்த எண்ணம் தானே என சூர்யாவும் சொன்னார். ஆனால் படம் சொன்னபடி ஓடுமா என்பதே இப்போது சந்தேகமாக உள்ளது.
சூர்யாவின் லைப் டைம் வசூல்
இதுபோதாது என்று இப்போது சூட்டோடு சூட்டாக படத்தோட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தோட அடுத்தப் பாகத்தையும் அறிவித்துள்ளார். அவர் சொல்வது இதுதான். படத்துக்கு ரசிகர்களோட வரவேற்பு அமோகமா இருக்கு.

kanguva
கேரளா, ஆந்திராவுல சூர்யாவின் லைப் டைம் வசூலை இரண்டே நாளில் பண்ணிடும். சூர்யா சார் ரொம்ப சந்தோஷமா இருக்காரு. பார்ட் 2 இன்னும் பயங்கரமா இருக்கும். அடுத்த வருஷம் அதற்கான வேலைகளைத் துவங்குவோம் என்றார்.
கங்குவா 2
Also read: Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!…
கங்குவா படம் முடிந்ததும் அடுத்து சிவா அஜீத் சாரோட ஒரு படத்துல கமிட் ஆகியிருக்கிறார். அது முடிந்ததும் மீண்டும் கங்குவா 2 படத்தை ஆரம்பிக்க உள்ளாராம் சிறுத்தை சிவா. மீண்டும் அஜீத், சிவா காம்போவில் ஒரு படம் வருமாம். அதன்பிறகு கங்குவா 2ம் ரெடியாகி விடும் என்கிறார் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா.