More
Categories: Cinema News latest news

விஜய் புயலெல்லாம் எடுபடல!.. கட்டுக்கடங்காமல் போகும் கங்குவா டீசர்!.. இத்தனை மில்லியன் வியூஸா?..

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இரவு முழுக்க சூர்யா ரசிகர்கள் யூடியூபில் குடிகொண்டிருந்து கங்குவா படத்தின் டீசரை அதிக வியூஸ் வரும்படி செய்துள்ளனர்.

கங்குவா டீசர் முழுக்க பாகுபலி படத்தில் வரும் காலகேயர்கள் போர்ஷன் போல மிரட்டுகிறது. தியேட்டர்களில் சூர்யாவை இப்படியொரு லுக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertising
Advertising

 

இதையும் படிங்க: கேரளாவிலும் கேரவன் ஏறிய விஜய்!.. திருவனந்தபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தளபதி கோஷம்!..

கங்குவா டீசரின் துவக்க காட்சியில் வரும் புலி, அந்த முதலை கண் சிமிட்டல் சிஜி என பல விஷயங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனிமல் வில்லன் பாபி தியோல் மற்றும் சூர்யா மோதுவது போன்ற கிளைமேக்ஸ் காட்சி வேறலெவல் என பாலிவுட்டிலும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹீரோயின் திஷா பதானியை ஒரு சீன்ல கூட காட்டவில்லைஎயெ என சிறுத்தை சிவா மீது திஷா பதானி ரசிகர்கள் வருத்தமடைந்திருப்பார்கள். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் தான் இது என்பதை உணர்த்தும் வகையிலேயே டீசர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அந்த தெலுங்கு படத்தின் காப்பியா கங்குவா?.. சூர்யா படத்தின் கதையையே உளறிய ஓடிடி நிறுவனம்!..

கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்ற நிலையில், அமேசான்பிரைம் இந்த ஆண்டுக்கான படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தான் கங்குவா டீசரே வெளியானது.

வெறும் 14 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கங்குவா டீசர் கடந்துள்ளது. கங்குவா டீசர் வெளியான சில மணி நேரங்களில் கேரளாவில் நடிகர் விஜய் கேரவன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வீடியோக்கள் டிரெண்டானாலும் தொடர்ந்து #KanguvaSizzle டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Published by
Saranya M

Recent Posts