Cinema News
Kanguva: சூர்யா நடிப்பு மட்டும் போதுமா?!.. கதைன்னு ஒன்னு வேணாமா?!.. 2 ஆயிரம் கோடி வருமா?..
Kanguva: சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸாகியிருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ கிரீன் சார்பாக படத்தை ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவான இந்தப் படத்தில் திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல், போஸ் வெங்கட் போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
பல விமர்சனங்கள்:தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இது உலகம் முழுவதும் 11500 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தின் புரோமோஷன் நேரத்தில் கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் பெறும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மிகுந்த நம்பிக்கையிலும் இருந்தார். பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: Kanguva: படம் பேரு கத்துவா-ன்னு வச்சிருக்கணும்!… கங்குவாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!….
இதில் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒருவர் கங்குவா படத்தை பார்த்து அவருடைய முழு விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார். கங்குவா திரைப்படம் ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக அமைந்திருக்கிறது. அதனுடைய கதை சாத்தியமுள்ளதாகவே கருதப்படுகிறது. ஆனால் மிகவும் விகாரமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கிரிப்ட்டை காப்பாற்ற வில்லை:இந்தப் படத்தில் பாராட்டப்படவேண்டிய விஷயம் சூர்யாவின் நடிப்பு. இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டப்படக் கூடியது. ஆனால் வெறும் நடிப்பால் மட்டுமே இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை வெற்றியடைய செய்ய முடியும் என்று சொல்லமுடியாது. படத்தில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தாலும் இடையிடையே சில தொய்வுகளும் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்திற்கு எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்? உண்மை பின்னணி…
எந்தவொரு கமெர்ஷியல் படமாக இருந்தாலும் எமோஷனல் டச் என்பது படத்திற்கு மிக முக்கியம். பாகுபலி படத்திலேயே சில எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அது இல்லவே இல்லை. சிறுத்தை சிவா படத்தின் முதல் பாதியில் திரைக்கதையை ஒன்றாக இணைத்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேலாக பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
அதை போல படத்தின் பிஜிஎம் சில இடங்களில் வேலை செய்திருக்கிறது. ஆனால் படமுழுக்க ஒரே சத்தமாகவே இருக்கிறது. அது எந்தவகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து நல்ல ஒரு சப்போர்ட்டை கொடுத்திருக்கிறார்கள் என அந்த விமர்சகர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதோடு இந்தப் படத்திற்கான ரேட்டிங்கும் 2.5 என கொடுத்திருக்கிறார். இதை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து இப்படிப்பட்ட படம் 2000 கோடியை தாண்டுமா என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.