More
Categories: Cinema News latest news

சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..

கண்ணதாசன் தமிழ் திரையுலகின் பழங்கால பாடலாசிரியர்களில் ஒருவர். இவரின் பாடல் வரிகள் மக்கள் மனதை கட்டி இழுக்கும்படி இருக்கும். இவர் பாடல்களை எழுதுவதில் வல்லவர் என்றால் இசையமைப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இவர்கள் இருவருக்கும் நிஜ வாழ்வில் அவ்வப்போது ஊடலும் கூடலும் இருந்தது உண்டு. இது இவர்களுக்கு இடையே அடிக்கடி நடக்கும் செயல். கவியரசர் கண்ணதாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியதால் அவரால் படபிடிப்புக்கு நேரத்திற்கு வர முடியாமல் இருந்துள்ளது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…

மேலும் அக்காலத்தில் அனைத்து இயக்குனர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட கவிஞர் கண்ணதாசன். இதற்கு காரணம் இவரின் பாடல் வரிகளே ஆகும். இப்படிப்பட்ட இவர்களுக்கு இடையே ஒரு சமயம் சின்ன மனஸ்தாபமும் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ரமன்னா இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு வெளியான படம்தான் பெரிய இடத்து பெண். இப்படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியும் மற்றும் அதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தும் உள்ளனர். இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே வெற்றி பாடல்களாக அமைந்தது.

இதையும் வாசிங்க: உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து ஜெயலலிதாவை தூக்கிய எம்.ஜி.ஆர்!. காரணம் என்ன தெரியுமா?…

கவியரசரின் நேரமின்மையால் அவர் பாடல்களை எழுத வருவதற்கு சற்று தாமதமாகும். ஒரு நாள் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசனை சற்று சீக்கிரமாகவே வரும்படி கூறியுள்ளார். கண்ணதாசனும் அவர் பேச்சுக்கு இணங்க சீக்கிரமாகவே பாடல் எழுத வந்துள்ளார்.

ஆனால் அன்று எம்.எஸ்.வி இசையமைக்க வரவில்லையாம். அவருக்கு போன் செய்தால் அவரின் உதவியாளர் போனை எடுத்து அவர் தூங்கி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். திரும்ப திரும்ப அழைத்தும் அவர் படபிடிப்புக்கு வரவில்லை. அப்போது இயக்குனர் கவியரசரே நீங்கள் பாடல்களை எழுதி தாருங்கள் அவர் வந்ததும் இசையமைத்து தர சொல்லலாம் என கூறியுள்ளார்.

மேலும் கண்ணதாசனிடம் படத்தின் கதையை கூறி பாடல்களை எழுத வைத்துள்ளார். இப்படத்தின் கதை எம்.எஸ்.வி இல்லாமல் இருக்கும் தற்போதைய நிலையை ஒத்து இருப்பதாக எண்ணி ஒரு பாடலை எழுதியுள்ளார். எழுதி விட்டு அந்த வரிகளுக்கு இசையமைக்க சொல்லிவிட்டு இவர் சென்று விட்டாராம்.

இதையும் வாசிங்க: இவர நம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கோம்! கரை சேர்த்துருவாரா? சந்தேகப்பட்ட நாகேஷை பிரமிக்க வைத்த எம்ஜிஆர்

பின் எம்.எஸ்.வி வந்ததும் இயக்குனர் அந்த பாடல் வரிகளை அவரிடம் கொடுத்துள்ளார். அதனை பார்த்த எம்.எஸ்.விக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனே இயக்குனரிடம் இந்த வரிகளுக்கு எவ்வாறு பாடல்களை எழுதுவது என கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் உங்கள் இருவருக்கு இடையே இன்று நடந்த சம்பவமும் படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதால் அதை நினைத்து கவியரசர் பாடல் எழுதியுள்ளார்.

இப்பாடல் கண்டிப்பாக தனக்கு வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். எம்.எஸ்.வியும் சிரித்து கொண்டே அதற்கு இசையமைத்துள்ளார். இவர்களுக்கு இடையே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான பாடல்தான் பெரிய இடத்து பெண் படத்தில் இடம்பெற்ற அவனுக்கென்ன தூங்கி விட்டான்…அகப்பட்டவன் நானல்லவா… பாடல். இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றியையும் அள்ளி தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
amutha raja

Recent Posts